அமைச்சரவையில் பங்கு வேண்டும் என பேசிய பழைய வீடியோவை தனது X தளத்தில் மீண்டும் பகிர்ந்தார் திருமாவளவன்.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என பேசிய பழைய வீடியோவை காலையில் பகிர்ந்த நிலையில் அது நீக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் தனது X தளத்தில் அதே வீடியோவை திருமாவளவன் பகிர்ந்துள்ளார்.
அமைச்சரவையில் பங்கு என்று தான் பேசிய பழைய வீடியோவை அட்மின் தான் பதிவிட்டார் என முன்னதாக திருமாவளவன் விளக்கம் அளித்தார்.
வீடியோவை பதிவிட்ட பின்பு, அதை ஏன் நீக்கினார்கள் எனத் தெரியவில்லை எனவும் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.