இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக, வந்த போது எதிர்பாராமல் நிகழ்ந்த சாலை விபத்துகளில் தவெக நிர்வாகிகள் 6 பேர் உயிரிழந்தது, அதிர்ச்சியும் வேதனையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். அவர்களின் இறப்பால், ஈடு செய்யவே இயலாத, தாங்கொணா இத்துயரில் இருந்து வெளிவரவே இயலாமல் மனம் தவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து, கழகத்திற்காக அவர்கள் ஆற்றிய பணிகள் கழக வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருக்கும் எனவும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார். மேலும், சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கழகத் தோழர்கள், விரைவில் முழுவதும் குணமடைந்து, வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
வீடியோ ஸ்டோரி
தவெக தொண்டர்கள் மரணம் – விஜய் போட்ட ஒற்றை ட்வீட்டால் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றபோது, சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.