வீடியோ ஸ்டோரி

" விஜய் எங்களுக்கு எதிரி அல்ல” – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

'எம்.ஜி.ஆர் தவிர்க்க முடியாத சக்தி. கருணாநிதியை பற்றி யாராவது பேசுகிறார்களா? இன்றைக்கும் பட்டித்தொட்டியெங்கும் எம்.ஜி.ஆரின் பாடல்களும் தத்துவங்களும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. விஜய் ஒன்றும் எங்களுக்கு எதிரி அல்ல என்று ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

ஸ்டாலினும் உதயநிதியும் பிரதமரை சந்திக்கிறார்கள். அப்போதாவது தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நிதியை கேட்டு வாங்கி வந்தார்களா என்றால் இல்லை. மாறாக, 2026 க்குப் பிறகு உங்களுக்கே ஆதரவு தந்துவிடுகிறோம் என எழுதப்படாத ஒப்பந்தத்தை செய்துவிட்டு வந்திருக்கிறார்கள்

 2026ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் சரி, இனி வரப்போகிற எந்த தேர்தலிலும் பாஜவுடன் கூட்டணி கிடையாது என்பதே அதிமுகவின் இறுதியான முடிவு. இப்போதும் இல்லை, எப்போதும் இல்லை என்பதுதான் அதிமுகவின் முடிவு