வீடியோ ஸ்டோரி

"தொடக்கத்திலேயே டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்தோம்.. ஆனால்..." - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

எது எப்படியிருந்தாலும், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். எங்களுக்காக நீங்கள் இருக்கிறீர்கள். ஆகவே, எதைப்பற்றியும் கவலைப்படாதீர்கள்” - என அரிட்டாப்பட்டியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

என்னை சந்தித்த இந்தப் பகுதியில் உள்ள பெரியவர்கள் எல்லாம் பாராட்டு நிகழ்ச்சி நடத்தவேண்டும். உங்களுக்கு நன்றி சொல்லவேண்டும் என்று அழைத்தார்கள்.  உள்ளபடி எனக்கு பாராட்டு சொல்வதைவிட, நன்றி சொல்வதைவிட உங்களுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்; உங்களுக்குத்தான் பாராட்டு சொல்லவேண்டும்.

நான், உங்கள் என்று பிரித்து பேச விரும்பவில்லை. நாம், நமக்கு இதில் வெற்றி கிடைத்திருக்கிறது. அதுதான் உண்மை. ஆகவே, அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்கக்கூடிய நாங்கள் என்றைக்கும் உங்களுக்குத் துணை நிற்போம் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே உறுதி சொல்கிறேன் என்று முதலமைச்சர் பேசினார்