K U M U D A M   N E W S

Author : Vasuki

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.

அதிமுக vs திமுக: எத்தனை அணிகள் வந்தாலும் இரு துருவ கூட்டணி மட்டும் தான் - திருமாவளவன் பேச்சு

எத்தனை அணிகள் உருவானாலும், திமுக தலைமையிலான கூட்டணிக்கும், அதிமுக தலைமையிலான கூட்டணிக்கும்தான் இரு துருவ போட்டியாக தான் 2026 சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என்று காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் போட்டியில் மீண்டும் சர்ச்சை... ரிங்கு சிங்கை கன்னத்தில் அறைந்த குல்தீப்.. வீடியோ வைரல்!

ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் கொல்கத்தா வீரர் ரிங்கு சிங்கை, டெல்லி வீரர் குல்தீப் யாதவ் கன்னத்தில் அறைந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சாதி வாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல் - தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு

நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதற்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலை பெயரை மாற்றக்கோரிய வழக்கு.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு!

சென்னை ஈ.வே. ரா நெடுஞ்சாலையை பெரியார் நெடுஞ்சாலை என பெயர் மாற்றக் கோரிய வழக்கில் எட்டு வாரங்களில் பரிசீலிக்க தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

234 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் - நயினார் நாகேந்திரன் அதிரடி

வரும் சட்டமன்ற தேர்தலில், 234 தொகுதிகளிலும் பாஜக வெற்றிபெறும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தீர்மானம் செல்லாது - உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை செல்லாது என அறிவித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஒப்புதல்.. மத்திய அரசு அதிரடி!

நாடு முழுவதும் சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக எதிர்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வந்த நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோயில்களில் குடமுழுக்கு விழா கோலாகலம்.. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்!

தமிழகம் முழுவதும் பல்வேறு கோயில்களில் நடைபெற்ற குடமுழுக்கு திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சீமானுக்கு கொலை மிரட்டல்.. சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ராஜ்யசபா சீட் இல்லை என்றாலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் - துரை வைகோ

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு ராஜ்யசபா சீட் கிடைக்கிறதோ இல்லையோ திமுகவுடன் கூட்டணி தொடரும் என்று துரைவைகோ தெரிவித்துள்ளார்.

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தேமுதிக சார்பில் நடைபெற்ற செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் கழக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் செயல்படுவார் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் கேப்டனின் மோதிரத்தை விஜய பிரபாகரனுக்கு அணிவித்தார்.

திருவண்ணாமலை கோயிலின் அறங்காவலர் குழு தலைவர் நியமனம் ரத்து!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக ஜீவானந்தம் நியமிக்கப்பட்டதை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச்சூடு!

தெற்கு காஷ்மீரின் பாரக்வால் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் எல்லைதாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

காமன்வெல்த் ஊழல் சுரேஷ் கல்மாடிக்கு எதிரான வழக்கை முடித்துவைத்த அமலாக்கத் துறை!

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் ஊழலில், சுரேஷ் கல்மாடி உள்ளிட்டோருக்கு எதிரான பணமுறைகேடு வழக்கை முடித்துவைக்குமாறு அமலாக்கத் துறையின் அறிக்கையை, தில்லி நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

சுற்றுலா வாகனங்களுக்கு 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் - சென்னை உயர்நீதிமன்றம்

சுற்றுலா வாகனங்களுக்கான அகில இந்திய உரிமம் 8 ஆண்டுகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்ற தமிழக போக்குவரத்து துறையின் முடிவில் தலையிட முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர் சங்க வழக்கு.. ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க உத்தரவு

படப்பிடிப்பு மற்றும் பட தயாரிப்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க மறுப்பதை எதிர்த்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தொடர்ந்த வழக்கில், ஃபெப்சி உள்ளிட்ட திரைத்துறை சங்கங்கள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெகாசஸ் வழக்கு: சேதவிரோதிகள் செல்போனை ஒட்டுகேட்பதில் தவறில்லை - உச்சநீதிமன்றம்

தனிநபர்களின் உரிமையை பாதிக்காதவரை தேசத்தின் பாதுகாப்புக்காக மத்திய அரசு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் தவறில்லை என பெகாசஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ATM-களில் 100, 200 ரூபாய் நோட்டுகள் கட்டாயம்- வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), வங்கிகளுக்கு (ஏப்.29) ஆம் தேதி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவிலுள்ள அனைத்து வங்கிகளும், தங்களுடைய ஏ.எடி.எம் களில்,100 ரூபாய் மற்றும் 200 ரூபாய் நோட்டுகளை கட்டாயம் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Find my device ஆப் மூலம் காணாமல் போன செல்ஃபோனை கண்டுபிடித்த பெண்!

நெற்றியில் தாக்கிவிட்டு, வைத்து தாக்கி செல்போனை பறித்து சென்ற கும்பலை, find my device ஆப் மூலம் சில நிமிடங்களில் செல்போன் பறித்துசென்ற திருடர்களை துரத்தி பிடித்த செல்போன் பறிகொடுத்தவரின் மனைவி மீட்டுள்ளார்

த.வெ.க வழக்கு.. ஜூன் மாதம் தள்ளிவைத்த நீதிமன்றம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சியின் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரிய வழக்கு விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளது - பிரமாண பத்திரம் தாக்கல் செய்த கேரள அரசு

முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், கேரள மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விழுந்து 4 வயது குழந்தை உயிரிழப்பு!

மதுரையில் மழலையர் பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து, நான்கு வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, தாளாளர், ஆசிரியர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

பஹல்காம் தாக்குதல்: பிரதமர் தலைமையில் நாளை அமைச்சரவைக் குழுக்கூட்டம்!

பிரதமர் தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுக்கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.