K U M U D A M   N E W S

Author : Vasuki

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துமீறும் பாகிஸ்தான்.. இந்திய ரானுவம் மீது துப்பாக்கிச்சூடு.. எல்லையில் தொடரும் பதற்றம்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

சார்தாம் யாத்திரை தொடக்கம்... பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சித்திரை திருவிழா... தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வான தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு.. ஸ்ரீசாந்த்-க்கு 3 ஆண்டுகள் தடை!

இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் விஜய் ஹசாரே தொடரில் விளையாடி இருந்தால் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் இடம் பிடித்திருப்பார் என்று ஸ்ரீசாந்த் கூறியதால், கேரள கிரிக்கெட் சங்கம் 3 ஆண்டுகள் அவரை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.

கோடிக்கணக்கில் சம்பாதித்த இந்திய யூடியூபர்கள்! CEO வெளியிட்ட தகவல்!

இந்திய யூடியூபர்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.21 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளதாகவும், அவர்களுக்காக மேலும், ரூ.850 கோடி ஒதுக்க உள்ளதாகவும் யூ-டியூப் CEO நீல் மோகன் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை மீண்டும் திறந்த பாகிஸ்தான் ராணுவம்!

பஹல்காமில் கடந்த வாரம் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, மூடப்பட்ட அட்டாரி-வாகா எல்லையை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் திறந்துள்ளது.

விராட் கோலியுடன் இணையும் STR.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

'சர்பத் ஜிகாத்' சர்ச்சை: பாபா ராம்தேவை கடுமையாக சாடிய உயர்நீதிமன்றம்!

ரூஹ் அஃப்சாவுக்கு எதிரான சர்பத்-ஜிஹாத் தொடர்பாக கருத்து தெரிவித்த பாபா ராம்தேவ் வகுப்புவாத அவதூறுகளைப் பயன்படுத்தக் கூடாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விசாரணைக்கு பின்னரே சாதிச்சான்றிதழ்கள் வழங்கவேண்டும் - தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

முழுமையான விசாராணைக்கு பிறகே சாதிச்சான்றிதழ்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - டிடிவி தினகரன் பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணி வலு பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தமிழகத்தில் உள்ள திமுக ஆட்சியை விரட்ட அனைத்து கட்சிகளும் இணைய வாய்ப்பிருப்பதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

வயது முதிர்ந்த தம்பதி படுகொலை - அரசியல் தலைவர்கள் கண்டனம்!

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

CBSE பள்ளிகளில் கட்டாய தேர்ச்சி நடைமுறைக்கு விலக்கு!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற நடைமுறை விலக்கப்பட்டு, 30 சதவீதத்திற்கும் குறைவாக மதிப்பெண் எடுத்தால் ஃபெயிலாக்கும் புதிய நடைமுறையை அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் தானியங்கி துறைமுகம்.. விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர்!

திருவனந்புரத்தில் அமைக்கப்பட்டுள்ள விழிஞ்சம் துறைமுகத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி, CPI(M), காங்கிரஸ் கட்சிகளை மறைமுகமாக சாடினார்.

திரையரங்கில் வெளியான ரெட்ரோ.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான ரெட்ரோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளியானது. ரெட்ரோ திரைப்படத்தினை ரசிகர்கள், தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர்.

ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டம் - 10 பேரிடம் விசாரணை

சென்னையில் ஆன்லைனில் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கையும் களவுமாக 19 லட்சம் பணத்துடன் பிடித்த போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்ணா பல்கலை வழக்கு.. சிபிஐ-க்கு மாற்றக்கோரிய மனு ஜூன்12ல் விசாரணை!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை 13 சாட்சிகள் மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுள்ளதாக தமிழக டிஜிபி சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

சிறையில் அதிகரிக்கும் போதைப்பொருட்கள்.. கைதிகளுக்கிடையே கைகலப்பு!

புழல் சிறையில் கைதிகள் பதுக்கி வைத்திருந்த போதை மாத்திரை காணாமல் போனதால் கைதியை தாக்கிய 7 கைதிகள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்ட ரயில்வே பாதுகாப்பு படை!

சென்னை எக்மோர் ரயில்வே ஸ்டேஷனில் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் உதவியுடன் நாச வேலை தடுப்பு நடவடிக்கை மற்றும் ரோந்து பணியினை ரயில்வே பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

கோவை விமான நிலையத்தில் இப்படி ஒரு விஷயமா? ஆச்சரியத்தில் பயணிகள்!

கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் வசதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாக விமான நிலைய ஆணையரகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கல்லூரி வளாகத்தில் ஆங்கிலேயர்கள் கல்லறை... அகற்ற உத்தரவிட்ட நீதிமன்றம்!

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள பழைய சட்டக் கல்லூரி அருகில் உள்ள இரு ஆங்கிலேயர்களின் கல்லறைகளை அகற்ற பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்மபூஷன் அஜித்! சினிமாவை கடந்த AK சாதனைகளும் சம்பவங்களும்!

“பிடிச்சத செய்யுறது என்னைக்குமே மாஸ்” என சினிமாவுக்காக மட்டும் பாடாமல், ரியலாகவும் வாழ்ந்து காட்டுவது கொஞ்சம் சவாலான விஷயம் தான். இந்த சவாலை அசால்ட்டாக சக்சஸ் செய்து காட்டியது அஜித்தாக தான் இருக்க முடியும்.

AK எனும் அஜித் குமார்! ரசிகர்களின் ரெட் டிராகன்... அன்றும்... இன்றும்... என்றும்... ரசிகைகளின் காதல் மன்னன்!

ஆசை நாயகனாக, காதல் மன்னனாக, அல்டிமேட் ஸ்டாராக, கோலிவுட்டின் தல-யாக தனது சினிமா கேரியரில் உச்சம் தொட்ட அஜித், தற்போது ஏகே எனும் ரெட் டிராகனாக மாஸ் காட்டி வருகிறார். அவரது பிறந்தநாளான இன்று, இந்த சாதனை பயணம் குறித்து பார்க்கலாம்.

Ajithkumar Birthday: 54-வது பிறந்தநாளை கொண்டாடும் அஜித்.. ரசிகர்கள் வாழ்த்து!

நடிகர் அஜித்குமார் இன்று தன்னுடைய 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். மே 1 தொழிலாளர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டாலும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அஜித் பிறந்தநாள் தான் கொண்டாட்டம் என்று சொன்னால் அது மிகையாகாது. சினிமா மட்டுமில்லாது தான் கால்பதிக்கும் அனைத்திலும் தனக்கென தனி முத்திரை பதித்து வரலாறு படைத்து வருகிறார் அஜித்குமார்.