K U M U D A M   N E W S

Author : Vasuki

நாளை மறுநாள் வெளியாகிறது +2 பொதுத்தேர்வு முடிவுகள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு.. இடைக்காலத்தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை.. பின்னணியில் அமைச்சரா? போலீஸ் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் நேற்று இரவு, மதுரை மத்திய தொகுதி மாநகர பாஜக மகளிர் அணி பொறுப்பில் உள்ள சரண்யாவை மர்ம நபர்கள் அறிவாளால் வெட்டி தலையை துண்டாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் அமைச்சர் PTR மீது காலனி வீசிய பாஜக பெண் நிர்வாகி கொடூரமான முறையில் தலையை துண்டித்து கொலை செய்யப்பட்ட நிலையில், கொலைக்கு குடும்ப தகராறு காரணமா? அல்லது அமைச்சரின் ஆதரவாளர்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து.. 22 பேர் படுகாயம்!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலை சாலையில் சுற்றுலாப் பயணிகள் வேன் பாறையில் மோதி கவிழ்ந்த விபத்தில் 13 குழந்தைகள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர்.

கோயில் திருவிழாவில் பிரச்னை இல்லை - புதுக்கோட்டை போலீஸ் விளக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாட்டில், கோவில் திருவிழாவின் ஒரு பகுதியான, தேரோட்டத்தின்போது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என புதுக்கோட்டை போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

வழுக்கி விழுந்த வைகோ... காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி..

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது வீட்டில் உள்ள குளியலறையில், வழுக்கி விழுந்து காயமடைந்த நிலையில், அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

delhi capitals vs sunrisers: மழையால் போட்டி ரத்து.. ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்த SRH!

நடப்பு ஐபிஎல் தொடரில் 18-வது சீசனில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஐதரபாத்தில் விடாமல் பெய்த தொடர் மழையின் காரணமாக போட்டி கைவிடப்பட்டது. இதன் மூலம் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து 3வது அணியாக ஐதரபாத் அணி வெளியேறியது.

பி.எஸ்.4 வாகன மோசடி: அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு பின், பி.எஸ்.4 வாகனங்கள் மோசடியாக பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வடபழனியில் நகை வியாபாரியை கட்டிப் போட்டு நகை கொள்ளை!

சென்னை வடபழனியில் நகை வியாபாரியை கட்டி போட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 4 பேரை கைது செய்த போலீசார், 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Goundamani Wife Death : கவுண்டமணியின் மனைவி மறைவு.. திரையுலகினர் இரங்கல்!

Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு பிரதமர் மோடி பாராட்டு!

ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

CBSE 10 மற்றும் 12 தேர்வு முடிவுகள்.. SMS மூலம் எளிதில் பார்க்கலாம்!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகளை மாணவர்கள் எளிதில் எஸ்.எம்.எஸ் மூலமாக எளிதில் பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

என் மனதை மிகவும் ஈர்த்தது... டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டிய அமைச்சர் மா. சுப்ரமணியன்!

சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ் ஃபேமிலி படத்தை, அமைச்சர் மா சுப்பிரமணியன் வெகுவாக பாராட்டியுள்ளார். அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி, கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

IPL 2025: லக்னோவை வீழ்த்தி 37 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அபார வெற்றி!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில், 54வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. 91 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய பிரப்சிம்ரன் சிங் ஆட்டநாயகன் விருதைப்பெற்றார்.

இதை செய்தால் ராகு கேது பெயர்ச்சியை கண்டு பயம் தேவையில்லை!

ஒவ்வொரு ஜோதிட சாஸ்திரமும், கிரகங்களின் மாற்றத்தின் அடிப்படையில், ஒவ்வொரு ராசியினருக்கும் ஒவ்வொரு பலனைத்தருகிறது. பொதுவாக பல்வேறு ராசிக்காரர்களுக்கு நல்லது நடந்தாலும், ஒரு சிலராசிக்காரர்களுக்கு, மோசமான பலன்களை கிரகப்பலன்கள் வழங்குகின்றன. அதிலும், குறிப்பாக, ராகு, கேது பெயர்ச்சி மாற்றங்கள் நிச்சயம் வாழ்க்கையில் ஒரு பெரிய மாற்றத்தை கொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

மதுரை சித்திரை பெருவிழா: தங்க, வெள்ளி வாகனத்தில் அருள்பாலித்த அம்மன்!

மதுரையில் உலக பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவின் ஆறாம் நாளான நேற்று தங்க, வெள்ளி ரிஷப வாகனங்களில் எழுந்தருளி அம்மனும், சுந்தரேஸ்வரரும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மணல் குவாரி திறக்க வலியுறுத்தல்.. லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டம் அறிவிப்பு..!

தமிழ்நாடு மணல் உரிமையாளர்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மணல் குவாரிகள் திறக்கப்படும்வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக திருச்சியில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.

17 ஆண்டுகளுக்கு பின் காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம்.. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. உலக பிரசித்தி பெற்ற புதுச்சேரி காரைக்கால் அம்மையார் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தி.மு.க அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறது.. வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு!

மத பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், திமுக அரசு தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்கிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது நீட் தேர்வு... தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு!

நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட இந்தியா முழுவதும் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தீவிர சோதனைக்குப் பிறகு, மாணவ, மாணவிகள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துமீறும் பாகிஸ்தான்.. இந்திய ரானுவம் மீது துப்பாக்கிச்சூடு.. எல்லையில் தொடரும் பதற்றம்!

ஜம்மு காஷ்மீரின் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பதற்றம் நீடித்து வருகிறது. துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு இந்திய ரானுவம் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.

சார்தாம் யாத்திரை தொடக்கம்... பத்ரிநாத் கோயில் நடை திறப்பு!

உலக புகழ்பெற்ற, இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றான உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை தொடங்கியதையடுத்து முன்னிட்டு புகழ்பெற்ற பத்ரிநாத் கோயில் நடை இன்று (மே.4) காலை 6 மணிக்கு திறக்கப்பட்டது.

சென்னையில் இருந்து இலங்கைக்கு சென்ற தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

சென்னையில் இருந்து இலங்கை சென்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் தப்பிச் சென்றார்களா? என்று இலங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

சித்திரை திருவிழா... தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சி சுந்தரேஸ்வரர்!

உலகப் புகழ்பெற்ற சித்திரை திருவிழா ஐந்தாம் நாள் நிகழ்வான தங்ககுதிரை வாகனத்தில் எழுந்தருளிய மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரரை வழிநெடுகிலும் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.