இந்தியா

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு.. இடைக்காலத்தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்!

வக்ஃப் சட்டத் திருத்தத்தின்படி நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை, உச்சநீதிமன்றம் வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

வக்ஃப் திருத்த சட்டத்துக்கு எதிரான வழக்கு.. இடைக்காலத்தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்!
வக்ஃப் திருத்த சட்டத்துக்கு இடைக்காலத்தடையை நீட்டித்த உச்சநீதிமன்றம்
கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரப்பட்ட வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதில் குறிப்பாக, திமுக, முஸ்லிம் லீக், தவெக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 70 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் வரும் மே 15 ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

புதிய சட்டத்தில் மதம் சார்ந்த விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை பறிப்பதாக எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் வாதங்களை நிராகரித்து, வக்ஃபு சட்டத்துக்கு தடை விதிக்க திமுக சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்களை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, வக்ஃப் போர்டுகளில் புதிய நியமனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது. அதாவது, திருத்த சட்டத்தின் கீழ் எந்த ஒரு நடவடிக்கையும் நியமனங்களும் மே 5 ஆம் தேதி வரை நடைபெறக் கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், இந்த வழக்கில் மத்திய அரசு மற்றும் மனுதாரர்கள் பதில் மனுத் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருந்தது.

மேலும் மத்திய அரசின் வாதங்கள் உண்மைக்கு புறம்பானது என்றும் திமுக தாக்கல் செய்த பதில் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், வக்ஃபு சட்டத்துக்கு எதிரான வழக்குகள், புதிய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது, உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள சஞ்சீவ் கண்ணா அடுத்த 4 நாட்களில் ஓய்வு பெறவுள்ள நிலையில், புதிய நீதிபதி நீதிபதி பி.ஆர். கவாய்
இந்த வழக்கை விசாரிப்பார் என்பதால், இடைக்கால தீர்ப்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை என்று நீதிபதி சஞ்சய் கண்ணா கூறிய நிலையில், இந்த வழக்கு நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வில் வரும் 15-ஆம் தேதி அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. வக்ஃப் அமைப்புகளில் நியமனங்கள் செய்ய விதிக்கப்பட்டுள்ள தடை அடுத்த விசாரணை வரை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.