லக்னோவின் ஆஷியானா பகுதியைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (50). இவரது மகன் அக்ஷத் பிரதாப் சிங் (21). கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி அதிகாலை, தந்தைக்கும் மகனுக்கும் இடையே நீட் நுழைவுத் தேர்வு தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. அக்ஷத் மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என அவரது தந்தை தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்துள்ளார்.
துப்பாக்கியால் சுட்டுக் கொலை
ஆத்திரமடைந்த அக்ஷத், அதிகாலை 4:30 மணியளவில் தனது தந்தையின் உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றுள்ளார். பின்னர், கொலையை மறைப்பதற்காகத் தந்தையின் கை மற்றும் கால்களை ரம்பம் மற்றும் கத்தியால் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உடலின் மற்ற பகுதிகளை ஒரு பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைத்துவிட்டு, கை, கால்களைப் பாலித்தீன் கவரில் சுற்றி ஒரு கால்வாய் அருகே வீசியுள்ளார்.
நாடகமாடிய மகன்
கொலைக்குப் பிறகு, தனது தந்தை காணாமல் போய்விட்டதாகப் பிப்ரவரி 23-ஆம் தேதி அக்ஷத் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தந்தை வேலை விஷயமாக டெல்லி சென்றிருப்பதாக அண்டை வீட்டார்களிடமும் பொய் கூறியுள்ளார். ஆனால், போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிய அக்ஷத், இறுதியில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
"தவறுதலாக நடந்துவிட்டது"
நேற்று நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, செய்தியாளர்களைப் பார்த்த அக்ஷத், "தவறுதலாக நடந்துவிட்டது" என்று கூறினார். ஆனால், இவ்வளவு கொடூரமான செயல் எப்படித் தவறுதலாக நடக்கும் என்ற கேள்விக்கு அவர் பதில் சொல்லவில்லை. மேலும், இந்த கொலையில் தனது தங்கைக்குப் பங்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.
போலீசார் ரத்தக் கறையுடன் இருந்த போர்வை, ரம்பம், கத்தி மற்றும் துப்பாக்கியைப் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது அக்ஷத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

LIVE 24 X 7