தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசம், சிறுவர்களின் மனநலனைப் பாதுகாக்கும் நோக்கில் சமூக ஊடகப் பயன்பாட்டிற்குத் தடை விதிக்கும் அதிரடி முடிவை எடுத்துள்ளன. ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே இத்தகைய சட்டங்களைக் கொண்டு வந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக இந்த மாநிலங்கள் முன்னோடியாகத் திகழ்கின்றன.
சிறுவர்கள் மொபைல் போன் மற்றும் சமூக ஊடகங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவும், அவர்களின் கல்வி மற்றும் மனநலனை மேம்படுத்தவும் இரு மாநில முதல்வர்களும் சட்டமன்றத்தில் இந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
கர்நாடகா: 16 வயது வரை கட்டுப்பாடு
கர்நாடக மாநிலத்தின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டைத் தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முற்றிலும் தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இது குறித்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்களுடன் ஆலோசிக்கப்பட்ட நிலையில், இந்தத் தடையை அமல்படுத்தும் முறைகள் குறித்து நிபுணர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், மாணவர்களிடையே புத்தக வாசிப்பை ஊக்குவிக்க "புத்தகத்தை ஏந்து, மொபைலை கைவிடு" என்ற சிறப்புப் பிரசாரத்தையும் மாநில அரசு தொடங்கியுள்ளது.
ஆந்திரா: 90 நாட்களில் அமல்
இதேபோன்று, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, 13 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த உத்தரவு அடுத்த 90 நாட்களில் அமலுக்கு வரும் என்று தெரிவித்த அவர், இத்தடையை 16 வயது வரையுள்ள சிறுவர்களுக்கும் நீட்டிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறினார். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து அடுத்த தலைமுறையைக் காப்பதே இந்த முடிவின் நோக்கம் என அவர் விளக்கமளித்தார்.
இந்தியாவில் முதன்முறை
சர்வதேச அளவில் சில நாடுகள் இத்தகைய கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்துள்ள போதிலும், இந்திய மாநிலங்களில் இத்தகைய சட்டம் இயற்றப்படுவது இதுவே முதல் முறையாகும். சிறுவர்களின் இணையப் பயன்பாட்டைக் கண்காணிப்பதிலும், இந்தத் தடையைச் சரியாக நடைமுறைப்படுத்துவதிலும் உள்ள தொழில்நுட்பச் சவால்களை எதிர்கொள்ள இரு மாநில அரசுகளும் தயாராகி வருகின்றன.

LIVE 24 X 7