நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை (Rajya Sabha) இடங்களுக்குத் தேர்தல் நடத்தத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை 6 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால், அந்த இடங்களுக்குப் புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் அட்டவணை
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி, மாநிலங்களவைத் தேர்தல் வருகிற மார்ச் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம் காலை 9 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 4 மணி வரை நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்த கையோடு, அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவிக்காலம் முடியும் தமிழக எம்பிக்கள்
தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைகிறது. திமுக தரப்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, பி. செல்வராசு ஆகியோரின் பதவிக்காலமும், அதிமுகவின் தம்பிதுரை மற்றும் தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் முடிவுக்கு வருகிறது.

LIVE 24 X 7