K U M U D A M   N E W S

Author : Vasuki

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுகின்றனர் - முதலமைச்சர் உவமை

மத்திய அரசும், மாநில ஆளுநரும் பாம்பு, நரியும் போல் செயல்படுவதாகவும், அவர்களின் நெருக்கடிகளைத் தாண்டி தமிழக அரசு சாதனை படைத்து வருவதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மக்கள் செல்வனுடன் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் பான் இந்திய படத்தில் இணையும் 'சாண்டல்வுட் டைனமோ' விஜய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ரசிகர்கள் இத்திரைப்படத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்

சூப்பர் ஸ்டார் படத்தின் தலைப்பில் நடிக்கும் சீமான்!

நடிகரும், அரசியல் கட்சித்தலைவருமான சீமான் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்மயுத்தம் என்ற படத்தின் தலைப்பில் நடித்துள்ள திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

Padma Awards: பத்ம விருதுகள் பெற்ற தமிழக பிரபலங்கள்.. குவியும் வாழ்த்து!

நடிகர் அஜித் குமார், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமையல் கலை நிபுணர் தாமு, சிற்பி ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், குடியரத்தலைவரிடம் இருந்து பத்ம விருதுகளைப் பெற்றனர்.

Padma Awards: பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் அஜித்குமார்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில், நடிகர் அஜித்குமாருக்கு கலைத்துறையில் சிறந்து விளங்கியதற்கான பத்ம பூஷண் விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

சாதி மறுப்பு திருமணத்தால் ஆணவக்கொலை.. வழக்கை தள்ளிவைத்த உயர்நீதிமன்றம்!

போக்குவரத்து துறையில் இளநிலை பொறியாளர்கள் நியமனத்திற்கு எதிரான மனு தள்ளிவைப்பு!

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணாகிறது - நீதிபதி வேதனை

பொதுமக்களின் வழக்குகளுக்காக 7 சதவீத நேரத்தை மட்டுமே நீதிமன்றங்கள் செலவிடுவதாகக் குறிப்பிட்ட சென்னை நீதிமன்றம், நீதிமன்றத்தின் உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது.

முருகேசன் - கண்ணகி ஆணவக் கொலை வழக்கு.. குற்றவாளிக்கு தண்டனை உறுதி!

கடலூரில் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் வழங்கிய 13 பேரின் ஆயுள் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தண்டனை பெற்றவர்களில் கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுள்ளது.

இந்திய கடற்படையை வலுப்படுத்த 26 ரஃபேல் விமானங்கள்.. ஒப்பந்தம் கையெழுத்து!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், இந்திய கடற்படைக்கு பிரான்சிடமிருந்து ரூ.63000 கோடியில் 26 ரஃபேல் விமானங்களை இந்தியா வாங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பிரதமர் மோடியுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

டெல்லியில் பிரதமர் மோடியுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பஹல்காம் தாக்குதல் மற்றும் எல்லையில் நிலவும் சூழல் குறித்தும் முக்கியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

பஹல்காம் தாக்குதல் தொடர்பான வழக்கு.. NIA விசாரணை!

பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 27 பேர் உயிரிழந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் விசாரித்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துள்ளது.

பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - பிரதமர் மோடி சூளுரை

பஹல்காமில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி சூளுரைத்தார்.

சிறுவனுக்கு பாலியல் தொல்லை - ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேர் போக்சோவில் கைது!

திருச்சியில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓட்டல் அதிபர் மகன் உட்பட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

காவிரி ஆற்றில் பராமரிப்பு பணி.. குடிநீர் தட்டுப்பாடு ஏற்பாடு அபாயம்!

காவிரி ஆற்றின் குறுக்கே பராமரிப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருவதால், விசைப்படகு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதி பொது மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை சித்திரை திருவிழா.. முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

மதுரையில் பிரசிதிப்பெற்ற கள்ளழகர் கோவில் சித்திரை பெருவிழா முகூர்த்தக் கால் நடும் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கியது. இதில், மீனாட்சியம்மன் மற்றும் கள்ளழகர் கோவில் அறங்காவல் குழு உறுப்பினர்கள் மற்றும் கோவில் பட்டர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

கோவைக்கு வருகை தந்த விஜய்.. தவெக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு!

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவையில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கில் விஜய் கலந்துகொண்ட நிலையில், அவரை காண ரசிகர்கள் திரண்ட நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், திமுக கொடியை சேதப்படுத்தியதாகவும், 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து பீளமேடு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவையில் ஜல்லிக்கட்டு.. 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

கோவையில் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியில், 800 காளைகள், 500 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற நிலையில் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழர் பண்பாடு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று காலை 7:00 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அமைச்சரவையில் மாற்றம்? இன்று மாலைக்குள் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு!

தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு இன்று மாலைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அமைச்சர்கள் சிலர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்குவதால், நீதிமன்றம் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனைகள் குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இருக்கும் என்று செய்திகள் வெளிவருகின்றன.

IPL2025: ஈடன் கார்டனில் கொட்டிய கனமழை.. கொல்கத்தா - பஞ்சாப் போட்டி ரத்து!

கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் பேட்டிங் செய்த நிலையில், கொல்கத்தா பேட்டிங் செய்த போது மழை குறுக்கிட்டதால் நேற்றையப்போட்டி ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி.. குப்வாராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனை ஆயுதங்கள் பறிமுதல்

பகல்ஹாம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி சோதனையில் பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இயல்புநிலை திரும்பும் பஹல்காம்.. தாக்குதலில் இருந்து மீண்டு வரும் மக்கள்!

பஹல்காம், தீவிரவாத தாக்குதல், இயல்புநிலை, ஜம்மு - காஷ்மீர், துப்பாக்கிச்சூடு,

சென்னையில் பிரபல ஜவுளிக்கடை கொள்ளை வழக்கு.. உத்தரபிரதேசத்தில் ஒருவர் கைது!

சென்னை, பிரபல ஜவுளிக்கடை, கொள்ளை வழக்கு, உத்திரபிரதேசம், காவல்துறை, தனிப்படை, கைது

ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர், சட்டமன்றம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வூதியம் உயர்வு,