தமிழ்நாடு

ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர், சட்டமன்றம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஓய்வூதியம் உயர்வு,

ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
ஓய்வூதியத்தை உயர்த்திய அரசு.. முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு
முன்னாள் சட்டமன்றம் மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் ரூபாய் 30 ஆயிரத்திலிருந்து ரூபாய் 35 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிதித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய திமுக உறுப்பினர் பிச்சாண்டி, சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் சட்டமன்ற பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 30 ஆயிரத்திலிருந்து 35 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கான குடும்ப ஓய்வூதியம் 15 ஆயிரத்திலிருந்து 17 ஆயிரத்து ஐநூறு ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் எனவும், முன்னாள் சட்டமன்றப் பேரவை மற்றும் மேலவை உறுப்பினர்களுக்கு ஆண்டொன்றுக்கு வழங்கப்படும் மருத்துவப்படியை 75 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார்.

தமிழக முதலமைச்சர் திமுக உறுப்பினர் எழுப்பிய மானியக்கோரிக்கையை உடனடியாக நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் சட்டமன்ற மற்றும் மேலவை உறுப்பினர்களும் தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றன்றனர்.