இந்திய கடற்படைக்கு 63 ஆயிரம் கோடி ரூபாயில் 26 அதிநவீன ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் பிரான்ஸ் மற்றும் இந்தியா இடையே கையெழுத்தானது. இதற்கு முன்னர், பிரான்ஸ் நாட்டில் இருந்து, டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து, 36 விமானங்கள் வாங்கிய நிலையில், தற்போது மேலும் 26 விமானங்கள் கடற்படைக்கு வாங்க தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் உள்ள டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து, இந்தியா ஏற்கனவே இந்திய விமானப்படைக்கு வாங்கிய 36 ரஃபேல் விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் பிரான்ஸ் நாட்டில் தயாரிக்கப்படும் ரஃபேல் விமானங்களை வாங்குவதற்கு அந்நாட்டு அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி ஒற்றை இருக்கை கொண்ட 22 விமானங்கள், இரண்டு இருக்கை கொண்ட 4 விமானங்கள் என மொத்தம் 26 ரபேல் விமானங்களை வாங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
டெல்லியில் நடந்த இந்நிகழ்ச்சியில் இருநாட்டு அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த 26 ரஃபேல் கடற்படை போர் விமானங்கள் இந்திய கடற்படைக்கு வழங்கப்பட உள்ள நிலையில், முற்றிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட INS விக்ராந்த் போர் கப்பலில் இருந்து 26 விமானங்களும் இயக்கப்பட உள்ளன. 26 ரஃபேல் விமானங்களுடன், ஆயுதங்கள், உதிரிபாகங்கள் ஆகியவை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 27 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனால், இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ரத்தானது. இதனைத்தொடர்ந்து, இருநாட்டுக்கும் இடையில் நிலவும், போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.