K U M U D A M   N E W S

இந்தியா

ஆசியக் கோப்பை: வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி!

ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்தியா - அமெரிக்கா வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு: வரி, விசா விவகாரங்கள் குறித்துப் பேச்சு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை சந்தித்துப் பேசினார். H1B விசா மற்றும் இருநாடுகளுக்கும் இடையேயான வரி விதிப்பு உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விவகாரங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ப்ளூ கிராஸ் அமைப்பிற்கு தமிழக காவல்துறை டிஜிபி கடிதம்

தெரு நாய்களுக்கு உணவு அளிப்போருக்கு தொல்லை தொடர்பாக காவல் நிலையங்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப தேவையில்லை என பதில் கடிதம்

ஆசிய கோப்பை 2025: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

துபாயில் நடந்த ஆசிய கோப்பை டி20 சூப்பர் 4 போட்டியில், பாகிஸ்தானை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அமோக வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 74 ரன்கள் குவித்தார்.

மகளிர் உலகக் கோப்பை 2025.. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி பரிசுத்தொகை - ஐசிசி அறிவிப்பு!

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இந்தியா வருகை.. எல்லை வர்த்தகம்குறித்து பேச்சுவார்த்தை!

அரசு முறைப் பயணமாக 2 நாள், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, நாளை (ஆகஸ்ட் 18) இந்தியா வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை அவர் டெல்லியில் சந்தித்துப் பேசவுள்ளார்.

சுதந்திர தின கொண்டாட்டம்...வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் விமான நிலையம்

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் 7 அடுக்கு பாதுகாப்பு

அண்ணாமலை திடீர் துபாய் பயணம்

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து எமிரேட்ஸ் ஏர் லைன்ஸ் பயணிகள் விமானத்தில் துபாய் புறப்பட்டுச் சென்றார்

ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது – விஜய் கண்டனம்

ராகுல் காந்தி தலைமையிலான இந்த பேரணியில் திமுக, திரிணாமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி, இடது சாரிகள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட 25 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

உயிர்பிழைத்த 181 பயணிகள்.. சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானம்!

ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா-இந்தியா உறவுகள்: பதட்டம் தேவையில்லை - கார்த்திக் சிதம்பரம் பேட்டி!

அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் கொடுத்த சிறப்புச் சலுகை.. அதிரடி தள்ளுபடியில் 50 லட்சம் டிக்கெட்டுகள்!

இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு 50 லட்சம் டிக்கெட்டுகளை சலுகை விலையில் விற்பனை செய்வதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி: ஏற்றுமதித் துறைக்குப் பெரும் பின்னடைவு!

இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரி விதித்துள்ள நிலையில், இந்திய ஏற்றுமதி நிறுவனங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. Walmart, Amazon போன்ற முன்னணி நிறுவனங்கள் ஆர்டர்களை நிறுத்தி வைத்துள்ளதால், இந்தியப் பொருளாதாரம் பின்னடைவைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா வரும் ரஷ்ய அதிபர் புடின்...அமெரிக்கா-இந்தியா இடையே வர்த்தக பதற்றம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வருவார் என தகவல் வெளியாகி உள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் ஜூனியரின் இந்தியா வருகை..பாரம்பரிய முறைப்படி வரவேற்பு!

அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோசுக்கு பாரம்பரிய முறைப்படி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வரவேற்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு இந்தியா பதில் – எண்ணெய் விவகாரத்தில் வெளியுறவுத்துறை விளக்கம்!

இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

டிரம்பின் புதிய வரி விதிப்பு: இந்தியா - அமெரிக்கா வர்த்தக உறவில் விரிசல் ஏற்படுமா?

உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் போர்.. நான் தான் தலையிட்டுத் தீர்த்து வைத்தேன் - டிரம்ப் மீண்டும் திட்டவட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போரைத் தீர்த்துவைத்ததாக மீண்டும் கூறியிருப்பது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபரின் திடீர் மாற்றம்.. இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட 25% வரி ஒத்திவைப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது விதித்த 25% இறக்குமதி வரி, ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்த நிலையில், தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து!

இந்திய பிரதமர் மோடி இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையே முக்கியத்துவம் வாய்ந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) கையெழுத்தானது.

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம்: அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்!

புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கி, அதில் ஏ-320 ரக விமானங்களை இயக்கும் நோக்கில் புதிய ஓடுபாதை அமைக்கும் திட்டம் தயாரிக்கப்படுவதாக இந்தியாவின் சிவில் விமானத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) இங்கிலாந்திற்கு அரசு முறை பயணமாக செல்லும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 2025 செஸ் உலக கோப்பை தொடர்.. FIDE அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

2025 செஸ் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறும் என FIDE அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக்டோபர் 30 முதல் நவம்பர் 27 வரை போட்டிகள் நடைபெறும் எனவும், போட்டி நடைபெறும் நகரம்குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் எனவும் FIDE தெரிவித்துள்ளது.

பிரதமர் மோடி மௌனத்தைக் கலைக்க வேண்டும்.. காங்கிரஸ் கடும் கேள்வி!

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போரை நிறுத்தியதாக 24வது முறையாக ட்ரம்ப் கூறியதற்கு, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பிரதமர் மோடி நிச்சயமாகப் பதில் அளிக்க வேண்டும் என்ரும், இது தொடர்பாகச் சிறப்பு விவாதம் நடத்த கோரிக்கை விடுக்கப்படும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெயராம் ரமேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறியது – சஞ்சய் சிங் அறிவிப்பு!

இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி வெளியேறியதாக, அக்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நடைபெறும் இந்தியா கூட்டணிக் கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என அறிவிப்பு வெளியாகியுள்ளது.