இந்தியா

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

பிரதமர் மோடி இன்று (ஜூலை 23) இங்கிலாந்திற்கு அரசு முறை பயணமாக செல்லும் நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!
பிரதமர் நரேந்திர மோடி 4 நாள் பயணமாக வெளிநாடு பயணம்... முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!
பிரதமர் நரேந்திர மோடி, லண்டன் மற்றும் மாலத்தீவுக்கு அரசுமுறை பயணமாக மேற்கொண்டுள்ளார். இந்த பயணங்களை முடித்துக்கொண்டு, ஜூலை 26ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வரவுள்ளார். இந்த வருகையின் போது தூத்துக்குடி, திருச்சி, மற்றும் அரியலூர் மாவட்டங்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.

பிரிட்டனில் வர்த்தக ஒப்பந்தம்:

ஜூலை 23–24 தேதிகளில், லண்டனில் நடைபெறும் இந்தியா-இங்கிலாந்து இலவச வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திடும் முக்கிய நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே வரி குறைப்பு, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் முதலீட்டுப் பெருக்கம் ஏற்பட உள்ளது.

இந்த பயணத்தில் இரு நாடுகள் இடையே சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் முறைப்படி இறுதி செய்யப்படும். இதுதவிர, பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பம் போன்றவற்றிலும் இந்தியாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் 6-வது மிக பெரிய முதலீட்டுக்கான நாடாக இங்கிலாந்து உள்ளது. இதுவரை 3,600 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று இங்கிலாந்தில், 2 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு இந்தியா முதலீடு செய்துள்ளது.

மாலத்தீவின் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்பு:

பிரிட்டனிலிருந்து நேரடியாக மாலத்தீவுக்கு பயணிக்கும் பிரதமர், ஜூலை 25 மற்றும் 26 தேதிகளில் அந்த நாட்டின் சுதந்திர நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மேலும் இந்தியா–மாலத்தீவுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் கடல் ஒத்துழைப்பு திட்டங்களை அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஜனாதிபதி முகமது முய்ஜுவை சந்தித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். எண்ணற்ற, இந்திய ஆதரவு வளர்ச்சி திட்ட பணிகளையும் அவர் தொடங்கி வைக்க உள்ளார்.

தமிழ்நாடு வருகை:

ஜூலை 26ம் தேதி மாலத்தீவிலிருந்து திரும்பும் பிரதமர் மோடி, தூத்துக்குடிக்கு வருகிறார். அங்கு விரிவாக்கப்பட்ட விமான நிலையத்தை அவர் திறந்து வைக்கிறார். அதன் பின் ஜூலை 27ம் தேதி, திருச்சியிலிருந்து ஹெலிகாப்டரில் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு பயணித்து, அங்கு நடைபெறும் *ஆடி திருவாதிரை விழாவில்* பங்கேற்கவுள்ளார்.

இந்த விழா, சிவபக்தியில் முக்கியமானதொரு பாரம்பரிய நிகழ்வாக இருப்பதோடு, தமிழக பாரம்பரியத்தை பிரதமர் நேரில் பார்வையிட்டு சிறப்பிக்கும் விதமாகும். பிரதமரின் வருகையை முன்னிட்டு, திருச்சி, அரியலூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.