மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சித் தலைவருமான அஜித் பவார் சென்ற சிறிய ரக விமானம், பாராமதி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் பலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து எப்படி நடந்தது?
இன்று காலை 8 மணியளவில் மும்பையில் இருந்து கிளம்பிய இந்த விமானம், சுமார் ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு 9 மணியளவில் பாராமதி விமான நிலையத்தைச் சென்றடைந்தது. அங்கு அவசரமாகத் தரையிறங்க முயன்றபோது விமானம் விபத்துக்குள்ளானது. சம்பவ இடத்திலிருந்து வெளிவரும் காட்சிகளில் விமானம் தீப்பற்றி எரிவதும், அதன் பாகங்கள் சிதைந்து கிடப்பதும் தெரிகிறது.
அஜித் பவார் உயிரிழப்பு
இந்த விமானத்தில் அஜித் பவாருடன் 5 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது. முதலில் படுகாயம் அடைந்த அஜித் பவாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதாக தகவல் வெளியான நிலையில், தற்போது அவர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருடன் பயணித்த அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவசரமாகத் தரையிறங்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்த விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.

LIVE 24 X 7