சென்னையில் அதிர்ச்சி.. வடமாநிலத்தவரை அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளி!
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வடமாநிலத்தை சேர்ந்தவரை ஊன்றுகோலால் அடித்துக்கொன்ற மாற்றுத்திறனாளியை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆனைமலை பாண்டியாறு திட்டம் குறித்து விரைவில் கேரளா அரசோடு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
வீடுகளை குத்தகை எடுக்கும் நபர்கள் உரிமையாளருக்கு தெரியாமல், மூன்றாவது நபருக்கு அடமானம் மற்றும் விற்பனை செய்வது மோசடி வழக்காக பதிவு செய்யப்படும் என்றும், இதுபோன்ற வழக்குகளில், தமிழக காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து டிஜிபி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும், மோசடிகளை தடுக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜின்னா ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பார்ட்டியில் பழக்கமான நண்பனின் தங்கைக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி, வீட்டிற்கே சென்ற யூடியூப் இன்புளுயன்சர் விஷ்ணுவுக்கு இளம் பெண்ணின் சகோதரர்கள் புரட்டி எடுத்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டு ஆளான விஷ்னு தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மாநிலக் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கௌரவ விரிவுரையாளர்கள் 254 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன் மற்றும் கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் ஒரே மாதிரியாகவும், எழுத்து பிழைகள் இல்லாமலும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் கோட்டையை நோக்கி, மெரினா காமராஜர் சாலையில் மாற்றுத்திறனாளிகள் மறியலில் ஈடுபட்ட நிலையில், போலீசார் அவர்களை கைது செய்தனர்.
98-வது ஆஸ்கர் விருது விழா கடந்த ஆண்டு 2026 மார்ச் 15 ஆம் தேதி நடைபெறும் எனவும், விருதுக்கான பரிந்துரைகள் வரும், ஜனவரி 22ம் தேதி வெளியாகும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஐபிஎல் டி20 லீக் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போப் பிரான்சிஸ் மறைவையொட்டி இந்தியாவில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை விமர்சித்து நடிகை வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
SP Suraj Production சார்பில் சுமதி.உமா ரமேஷ் ரெட்டி மற்றும் எம்.ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், கன்னட சக்கரவர்த்தி டாக்டர் சிவராஜ்குமார், ரியல் ஸ்டார் உபேந்திரா, இராஜ் பி ஷெட்டி இணைந்து நடிக்க, பிரபல இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா இயக்கத்தில், மிரட்டலான ஃபேண்டஸி ஆக்சன், திரில்லராக கன்னட திரைப்படமான 45 உருவாகியுள்ளது.
சுந்தர் சி, வடிவேலு கூட்டணியில் உருவாகியுள்ள “கேங்கர்ஸ்” திரைப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் உள்ள A.C.S மருத்துவக் கல்லூரியில் சிறப்பாக நடைபெற்றது.
தனுஷ், சேகர் கம்முலா & தேவி ஸ்ரீ பிரசாத் கூட்டணியில், 'குபேரா' படத்தின் முதல் சிங்கிளான ‘போய் வா நண்பா’ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
KKR vs GT: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 39-வது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு சேலம் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக் கோரி காவல் துறை தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
கோவையில் வரும் ஏப்ரல் 26,27 ஆம் தேதி தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளதாக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
திருச்சி உறையூரில் ஏற்பட்ட உயிரிழப்பு ஏற்பட்ட நிலையில், கழிவுநீர் கலந்த குடிநீரால் நடைபெறவில்லை என நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் அன்னை இல்லம் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், நடிகர் பிரபு தாக்கல் செய்த மனுவை தொடர்ந்து, அன்னை இல்லத்தின் உரிமையாளர் பிரபு தான் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில், 12 வயது சிறுவன் வளர்ப்பு நாய் கடித்த சம்பவத்தை தொடர்ந்து, அந்த நாயை கட்டி வைக்குமாறு சிறுவனின் தாய் கூறிய நிலையில், அந்த நாயின் உரிமையாளர்கள் சிறுவனின் தாயார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.