ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரானது நாளுக்கு நாள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நடப்பு தொடரில் ஒவ்வொரு அணியிலும் பல்வேறு மாற்றங்கள் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற கொல்கத்தா
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் அஜிங்ய ரஹானே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுப்மன் கில் – சாய் சுதர்சன் ஆகியோர் முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.
அதிரடி காட்டிய சுப்மன்கில்
தமிழக வீரரான சாய் சுதர்சன் இந்த சீசனில் மிகவும் அதிரடியாக விளையாடி வருகிறார். அதன்படி நேற்றைய போட்டியில், 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்தார். அடுத்து ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த கில் அதிரடியாக விளையாடி 90 ரன்களை குவித்தார். ஜாஸ் பட்லரும் தன் பங்கிற்கு 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். அடுத்து வந்த திவேட்டியா ரன் டக் அவுட் ஆனார். ஷாருக்கான் 11 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் 20 ஓவர்களில் குஜராத் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா மற்றும் ரசல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
199 ரன்கள் இலக்கு
கொல்கத்தா அணி 199 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரார்களாக களமிறங்கிய ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ரஹானே 50 அரைசதம் அடித்த நிலையில், ஜாஸ் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து வந்த வெங்கடேஷ் ஐயர் 14 ரன்னிலும், ரிங்கு சிங் 17 ரன்னிலும், ஆண்ட்ரே ரசல் 21 ரன்னிலும் அதிகபட்சமாக ரகுவன்சி 27 ரன்களை எடுத்தனர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 159 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இறுதியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக அஜிங்க்யா ரஹானே 50 ரன்கள் எடுத்தார். குஜராத் அணியின் பிரசித் கிருஷ்ணா மற்றும் ரஷீத் கான் தலா 2 விக்கெட்டை வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம், புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. நடப்பு தொடரில் 6 போட்டியில் வெற்றியும், 2 போட்டியில் தோல்வியும் பெற்ற நிலையில், குஜராத் அணி முதலிடத்தில் உள்ளது.