K U M U D A M   N E W S

Author : Vasuki

'சாட்டை'-க்கும் நாதகவுக்கும் தொடர்பில்லை’ - சீமான் அறிக்கை

"சாட்டை துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் பக்கத்திற்கும், நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் துரைமுருகனின் தனிப்பட்ட கருத்து; அவற்றிற்கு எந்தவகையிலும் நாம் தமிழர் கட்சி பொறுப்பு ஏற்காது” என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்ய ED-க்கு நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சரின் தம்பி வழக்கு... ED-க்கு உயர்நீதிமன்றம் க்ரீன் சிக்னல்!

தனக்கெதிராக சிபிஐ பதிவு செய்த மோசடி வழக்கை ரத்து செய்யக்கோரி அமைச்சர் நேருவின் சகோதரர் கே. என்.ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத் துறை இடையீட்டு மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

“சொட்ட சொட்ட நனையுது” படத்தின் டைட்டில் ப்ரோமோ வெளியீடு !!

Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் "சொட்ட சொட்ட நனையுது". படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரோமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

வக்ஃபு நிலத்தில் ஆக்கிரமிப்பு? நடு ரோட்டில் நிற்கும் கிராமம்! பரிதவிக்கும் இந்து குடும்பங்கள்!

வேலூரில் உள்ள ஒரு கிராமத்தில் 150 இந்துக்குடும்பங்கள் வசிக்கும் வீடுகளை வக்ஃபு சொத்து எனக் கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள மக்கள் ஆட்சியரை அணுகியுள்ளனர்.

பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்க இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி!

மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் பேரிடர் காலங்களில் மீனவர்களை மீட்பது, கடலின் மிதந்து வரும் சந்தேகமான பொருளை ஹெலிகாப்டரில் இருந்து கயிறு மூலமாக இறங்கி சோதனை செய்வது தொடர்பாக இந்திய கடற்படை பைலட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

தேமுதிகவை கழற்றிவிட்ட அதிமுக? கமலாலயம் முன் நிற்கும் பிரேமலதா? கூட்டணிக்கு அடிபோடும் அண்ணியார்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரதமர் மோடியை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இப்படி திடீரென பாஜகவோடு நட்பு பாராட்டுவது ஏன்? அதிமுக கைவிட்டதால் பாஜகவை நாடுகிறதா தேமுதிக? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்! Type 5 Diabetes என்றால் என்ன?

உலகில் பல கோடி மக்கள் நீரிழிவு நோயால் அவதியுற்று வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்போது புது வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன? அதன் வீரியம் என்ன? யாருக்கெல்லாம் அந்த நோய் ஏற்படும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

துணைமுதல்வர் செல்வப்பெருந்தகை? போஸ்டரால் வந்த குழப்பம்..! ஷாக்கில் திமுக தலைமை..!

சென்னையில் ஆங்காங்கே தமிழக காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்காக போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளாது. இந்த போஸ்டர் தான் இன்றைய தமிழ்நாடு அரசியல் களத்தின் ஹைலைட்டாக மாறியுள்ளது. அப்படி அந்த போஸ்டரில் இருந்தது என்ன? தமிழக காங்கிரஸ் போடும் தனி ரூட் என்ன? செல்வப்பெருந்தகை வைத்திருக்கும் விளக்கம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

ஸ்டாலினுக்கு எதிரான வேட்பாளர்.. பாஜகவின் பக்கா ஸ்கெட்ச்? இதுதான் சரியான போட்டி!

தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், பதவி பறிக்கப்பட்டாலும் அண்ணாமலையை வைத்து அதிரடி காட்ட டெல்லி பாஜக ஒரு திட்டம் தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது. அத்திட்டம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்..

தொடர் விடுமுறை எதிரொலி...கொடைக்கானலில் கடும் போக்குவரத்து நெரிசல்!

கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா தலங்களிலும், நகர்ப்பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

அதிமுக, பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன்

மாற்றம் உறுதி என மக்கள் தீர்மானித்து அதிமுக பாஜக கூட்டணி நம்பிக்கை கூட்டணியாக இருக்கும் - த.மா.க தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

ரவுடி வரிச்சியூர் செல்வத்தை சுட்டுப் பிடிக்க உத்தரவு!

கோவையில் ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் வரிச்சியூர் செல்வத்தை கைது செய்யவும், தேவைப்பட்டால் காலில் சுட்டு பிடிக்க காவல் துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக தனித்து நிற்க தயார்.. திமுக தயாரா? சவால்விட்ட முன்னாள் அமைச்சர்

திமுக தனித்து நின்றால், அதிமுகவும் கூட்டணி வைக்காமல் தனித்து நிற்கத் தயார் தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாவல் விடுத்துள்ளார்.

கோயில் வளாகத்தில் வணிக வளாகம் - நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்ட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் நேற்று (ஏப்.13) பதவியேற்ற நிலையில், முன்னாள் தலைவரின் டெல்லி பயணம் பாஜக அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது!

கோவையில் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஜான் ஜெபராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

IPL 2025: திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. பஞ்சாப்பை பந்தாடிய Abhishek sharma..SRH அபார வெற்றி!

ஐபிஎல் 2025 டி20 லீக் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

பாமக தலைவராக நானே தொடர்வேன் - அன்புமணி ராமதாஸ் அறிக்கை

கட்சியின் தலைவராக நான் முறைப்படி பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்திருக்கும் நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தை 4 ஆண்டுகள் முதலமைச்சர் சீரழித்துள்ளார் - இபிஎஸ் விமர்சனம்

பாஜக பூச்சாண்டி காட்டியே, நான்கு ஆண்டுகளாக தமிழகத்தை வஞ்சித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் எத்தனை நாட்கள்தான் தமிழக மக்களை ஏமாற்ற முடியும்? என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

சபரிமலையில் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா கோலாகலம்!

உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டுக்கான விழா ஏப்ரல் 2ம் தேதி தொடங்கிய நிலையில், நாள்தோறும், பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.

2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்- செல்லூர் ராஜு

தேர்தலுக்கு முன்பாக கூட கூட்டணி அமையும், அதெல்லாம் தேர்தல் வியூகம் என்றும், 2026 தேர்தலில் அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்றும் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

பொன்முடி வெளியே.. திருச்சி சிவா உள்ளே.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி நடவடிக்கை

திமுகவின் கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த திருச்சி சிவா, இன்று முதல் திமுகவின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்படுவதாக திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடியின் ஆபாச சர்ச்சை பேச்சு எதிரொலி- கட்சிப்பதவியில் இருந்து நீக்கிய திமுக

அமைச்சர் பொன்முடி பொதுக்கூட்டத்தில் பேசிய ஆபாசமான பேச்சு சர்ச்சையான நிலையில், திமுக துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது - கனிமொழி எம்.பி கண்டனம்!

திமுக அமைச்சர் பொன்முடியின் ஆபாசமான பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.