Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 01-09-2024
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 01-09-2024
Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Headlines Tamil | 01-09-2024
தேனியில் மலையாள சினிமா பாலியல் சர்ச்சை குறித்த கேள்வியால் தமிழ் நடிகர் ஜீவா ஆவேசம்.. செய்தியாளரைப் பார்த்து அறிவு இருக்கிறதா? என அநாகரீகமாகப் பேசியதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு நிலவியது
விக்கிரவாண்டியில் நடைபெறும் மாநாட்டில் தவெக-வின் கொள்கைகள் குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதுரை வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மஞ்சுவிரட்டு நடத்துவதில் முன்விரோதம்.. மேட்டுநீரேத்தான் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு
ஆந்திராவில் பெய்த கனமழையால் வீடுகள் இடிந்து கிருஷ்ணா, குண்டூர் பகுதிகளில் இதுவரை 10 பேர் உயிரிழப்பு. இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதி
கொல்லிமலையில் தொடரும் கனமழையால் சாலையில் கரைபுரண்டோடும் காட்டாற்று வெள்ளம்.. சாலைகள் அரிப்பு ஏற்பட்டு முழுவதும் சேதம்
தமிழ்நாடு முழுவதும் நாளை (செப்டம்பர் 2) பாஜக உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள கல்லூரிகள், தனியார் பள்ளிகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது அதிகரிப்பு
அக்டோபர் 10ம் தேதி வேட்டையன் வெளியாவதே சரி - நடிகர் சூர்யாவின் பேச்சால் நெகிழ்ந்த திரையுலகினர்
DPL T20 Match Highlights : டெல்லி பிரீமியர் லீக் டி20 போட்டியில் இந்திய வீரர் பிரியான்ஷ் ஆர்யா 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார்.
ரூ.400 கோடி மதிப்பில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ஓமியம் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
சென்னை வேளச்சேரியில் 4வது வாரமாக நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்களை அனைவரும் பங்கேற்பு
சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று தகுதி மற்றும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது
சென்னை பட்டினம்பாக்கத்தில் விற்பனைக்காக வலி நிவாரணி வைக்கப்பட்டிருந்த 2,000 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது
செங்கல்பட்டு - அனுமந்தபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் ராணுவ துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் விபத்து
Thiruchendur Murugan Festival : திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடைபெற்றும் வரும் ஆவணித் திருவிழாவின் 10ம் நாளான நாளை (செப்டம்பர் 2) தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது. தேரோட்டம் காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
ஆவணி மாத சனி மஹாபிரதோஷத்தையொட்டி தஞ்சை பெரியக்கோயிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள், அலங்காரங்கள் நடைபெற்றது
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 01-09-2024 | Kumudam News 24x7
Mettur Dam Water Level Hike : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 6,396 கன அடியிலிருந்து 19,199 கன அடியாக அதிகரிப்பு
Vinesh Phogat Joins Farmers Protest at Shambhu Border : உரிமைக்காக 200 நாட்கள் போராட்டம் நடத்துவதை பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது என்று மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தெரிவித்துள்ளார்.
Hogenakkal Waterfalls : கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 25,000 கன அடியாக அதிகரிப்பு. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகேனக்கல் அருவிகள் மற்றும் காவிரி ஆற்றங்கரை ஓரங்களில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை.
Firecracker Factory Blast in Tuticorin : தூத்துக்குடி மாவட்டம் குறிப்பன்குளம் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் இருவர் பலியான நிலையில், பட்டாசு ஆலை உரிமையாளரிடம் போலீசார் விசாரணை
CM Stalin Relief To Firecrackers Exposion Victims : பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Actor Vijays Party First 100 Feet TVK Flag Hoisted in Theni : நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் 100 அடி கொடிக் கம்பம் இன்று தேனியில் ஏற்றப்பட உள்ளது.