K U M U D A M   N E W S

Director Cheran Case : தனியார் பேருந்து ஹாரன் விவகாரம்... சேரனுக்கு ஆதரவாக செயல்படுகிறதா காவல்துறை..?

Director Cheran Case of Private Bus Honking : தனியார் பேருந்து தொடர்ச்சியாக ஹாரன் அடித்து வந்ததாக இயக்குநர் சேரன் நடு ரோட்டில் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலானது. இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், போலீஸார் சேரனுக்கு ஆதரவாக செயல்படுவதாக தனியார் பேருந்து தொழிலாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Monkey Pox Guidelines : அச்சுறுத்தும் குரங்கு அம்மை; வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட தமிழ்நாடு சுகாதாரத் துறை

Tamil Nadu Health Department Issued Monkey Pox Guidelines : குரங்கு அம்மை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள செய்ய வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Doctors Protest : மருத்துவ மாணவி கொலை... நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தம்... இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு!

All India Doctors Association Protest Against Kolkata Doctor Rape Murder Case : பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்து, இந்திய மருத்துவர்கள் சங்கம் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளது.

ISRO EOS 08 launch : விண்ணில் வெற்றிகரமாகப் பாய்ந்த SSLV D3 ராக்கெட்!

ISRO EOS 08 Satellite launch SSLV D3 Today : ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து SSLV D3 ராக்கெட் 3 செயற்கை கோள்களுடன் இன்று வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

Heavy Rain Warning : 14 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! மக்களே உஷார்....

Heavy Rain Warning in Tamil Nadu : தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Thangalaan Box Office Collection Day 1: சீயான் விக்ரமின் தங்கலான் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!

Thangalaan Box Office Collection Day 1 : சீயான் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அதிக எதிர்பார்ப்புடன் நேற்று வெளியானது. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ள நிலையில், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து படக்குழு அதிகாரப்பூர்மாக அறிவித்துள்ளது.

The GOAT Movie Trailer Release Date : இதோ ’கோட்’ படத்தின் ட்ரெய்லர் அப்டேட்.. தயாரான தளபதி ரசிகர்கள்..

The GOAT Movie Trailer Release Date : விஜய் நடிப்பில் தயாராகியுள்ள கோட் திரைப்படத்தின் ட்ரெய்லர் ஆகஸ்ட் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

Anna Canteens Reopen : மீண்டும் வந்தாச்சு 'அண்ணா கேண்டீன்'.. 5 ரூபாய்க்கு உணவு.. அசத்தும் முதல்வர்!

Anna Canteens Reopen in Andhra Pradesh : முதற்கட்டமாக 100 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த மாத இறுதிக்குள் மாநிலம் முழுவதும் 203 இடங்களில் அண்ணா கேண்டீன்கள் தொடங்கப்படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது. இந்த கேண்டீன்களில் காலை, மதியம் மற்றும் இரவு என 3 வேளையும் 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்.

Pa Ranjith Mother : "இந்த படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டார்; பெருமையா இருக்கு" - ரஞ்சித்தின் தாய் உருக்கம்

Pa Ranjith Mother on Thangalaan Movie : தங்கலான் திரைப்படத்தை உருவாக்குவதற்கு, தனது மகன் ரஞ்சித் மிகவும் கஷ்டபட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் தாய் குணவதி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

Duleep Trophy 2024 : 'துலீப் டிராபி' தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்கள்.. ஸ்டார் பிளேயர்ஸ் யார்? யார்?

BCCI Announced Indian Players in Duleep Trophy 2024 : இந்தியாவில் ரஞ்சி கோப்பை, துலீப் டிராபி உள்ளிட்ட பல்வேறு முதல் தர கிரிக்கெட் போட்டித் தொடர்கள் நடத்தப்படுகின்றன. ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பு முதல் தர போட்டிகளில் அசத்திய வீரர்கள்தான் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். ஐபிஎல் அறிமுகம் செய்யப்பட்டதும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கு முக்கியத்துவம் குறைந்தது.

TN Rain : தமிழகத்தில் 6 நாட்கள் மழை கொட்டப்போகுது.. எந்தெந்த மாவட்டங்கள்?.. முழு விவரம்!

Chennai Meteorological Department Weather Update in Tamil Nadu : வரும் 19ம் தேதி கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாமக்கல், சேலம், ஈரோடு, கரூர், மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

Anbumani Ramadoss : பட்டியலின சமுதாயத்தை சார்ந்தவரை முதல்வராக ஆக்குவோம் - அன்புமணி ராமதாஸ்

Anbumani Ramadoss About Scheduled Caste Chief Minister : தமிழ்நாட்டில் பட்டியலின சமூதாயம் பாமகவிற்கு ஆதரவு கொடுத்தால் தலித் சமுதாயத்தை சார்ந்தவரை முதலமைச்சராக ஆக்குவோம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Tea Party 2024 : தேநீர் விருந்து: சிரித்தபடி பேசிய மு.க.ஸ்டாலின்-ஆர்.என்.ரவி.. பங்கேற்றவர்கள் யார்? யார்?

CM Stalin Participate Governor RN Ravi Tea Party 2024 : ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடந்த தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். தேநீர் விருந்தில் பங்கேற்க சென்ற முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவியும், அவரது மனைவியும் புன்னகை ததும்ப வரவேற்றனர். பின்பு அங்கு அமைக்கப்பட்டு இருந்த மேடையில் நமது சுதந்திர போராட்டத்தை நினைவுகூறும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

Bank Loan Fraud Case in Chennai : அமெரிக்கா சென்றவர் பெயரில் வங்கிக் கடன்.. பணத்தை கட்டாமல் டிமிக்கு கொடுத்த பலே கில்லாடி கைது

Bank Loan Fraud Case in Chennai : வெளிநாடு சென்றிருந்தவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் பெற்று மோசடி செய்தவரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

Cheating Gang Arrest : 'சதுரங்க வேட்டை' பாணியில் பணம் மோசடி.. கள்ள நோட்டுகள், தங்க நகைகள் பறிமுதல்..

Cheating Gang Arrest in Chennai : பழைய 2000 ரூபாய் நோட்டுகள் கொடுத்தால் அதற்கு பதிலாக புதிதாக இரண்டு மடங்கு பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த இரண்டு பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 

Speaker Appavu : உதயநிதி காயாக உள்ளார்.. பழுக்க வேண்டியது தான் எஞ்சியுள்ளது.. சபாநாயகர் சூசகம்

Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலின் விதையாகி செடியாகி மரமாகி தற்பொழுது காயாக உள்ளார் பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Independence Day 2024 : ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Governor RN Ravi Tea Party on Independence Day 2024 : ஆளுநரின் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாமக, தமாகா மற்றும் அமமுக ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதேபோல் அதிமுகவும் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளது.

Minister Sivasankar : நான் தான் அமைச்சர்; அன்புமணி ராமதாஸுக்கு எப்படி தெரியும்? : சிவசங்கர் கேள்வி

Transport Minister Sivasankar on Anbumani Ramadoss : போக்குவரத்து துறை அமைச்சராக நான் இருக்கிறேன்; ஆனால் பேருந்து கட்டண உயர்வு அன்புமணி ராமதாஸருக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindus Attack in Bangladesh : இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதா?.. பொங்கியெழுந்த விவேக் ராமசாமி!

Vivek Ramaswamy Condemns Hindus Attack in Bangladesh : ''1971ம் ஆண்டு வங்கதேசம் சுதந்திரத்திற்காக இரத்தக்களரிப் போரை நடத்தியது. இலட்சக்கணக்கான வங்கதேச மக்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். இது பெரும் சோகம்'' என்று விவேக் ராமசாமி கூறியுள்ளார்.

Manorathangal Movie Release : வெளியானது மனோரதங்கள் ஆந்தாலஜி சீரிஸ்... மம்முட்டி, மோகன்லால் ரசிகர்கள் கொண்டாட்டம்!

Manorathangal Anthology Movie Released Today on ZEE5 OTT : கமல்ஹாசன், மம்முட்டி, மோகன்லால், ஃபஹத் பாசில், நதியா, பார்வதி உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ள மனோரதங்கள் ஆந்தாலாஜி சீரிஸ், இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியானது.

Vikram Watch Thangalaan Movie : ரசிகர்களுடன் தங்கலான் படம் பார்த்த சீயான் விக்ரம்... தியேட்டரில் நடந்த முரட்டு சம்பவம்!

Actor Vikram Watch Thangalaan Movie with Fans : சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து விக்ரம், மாளவிகா மோகனன் ஆகியோர், சென்னை சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் இணைந்து தங்கலான் படத்தை பார்த்து ரசித்தனர்.

Kolkata Doctor Rape Murder Case : மருத்துவ மாணவி கொலை... மேற்குவங்கத்தில் தீப்பந்தம் ஏந்தி பேரணி... போராட்டக் களத்தில் நுழைந்த கும்பல்

Kolkata Doctor Rape Murder Case : கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில், மர்ம கும்பல் நுழைந்ததால் போராட்டக் களம் வன்முறையாக மாறியது. மருத்துவமனை அறை, காவல்துறை வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Independence Day 2024 : சென்னை கோட்டை கொத்தளத்தில் 4வது முறையாக தேசிய கொடி ஏற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

CM Stalin Host Flag on Independence Day 2024 in Chennai : 78வது சுதந்திர தினத்தை ஒட்டி சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

Independence Day 2024 : 78வது சுதந்திர தின கொண்டாட்டம்... செங்கோட்டையில் 11வது முறையாக தேசிய கொடி ஏற்றிய பிரதமர் மோடி!

PM Modi Host Flag on Independence Day 2024 in Delhi : 78-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றினார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவி வகித்து வரும் நரேந்திர மோடி, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவது இது 11வது முறை ஆகும்.

Thangalaan Review: தெறிக்கவிட்ட சீயான் விக்ரம்... Award கன்ஃபார்ம்... தங்கலான் டிவிட்டர் விமர்சனம்!

Thangalaan Movie Twitter Review in Tamil : சீயான் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் திரைப்படம் இன்று வெளியானது. பீரியட் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்திற்கு, ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.