K U M U D A M   N E W S
Promotional Banner

கவுதமாலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவு!

கவுதமாலா நாட்டில் இன்று (ஜூலை 9) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவான இந்த நிலநடுக்கம், அந்த நாட்டின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.