K U M U D A M   N E W S

ஆர்ப்பரிக்கும் கோவை குற்றாலம்.. அருவியில் குளிக்க 23 வது நாளாகத் தொடரும் தடை..!

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனைத்தொடர்ந்து அருவியில் குளிக்க தொடர்ந்து 23வது நாளாக தடைவிதிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தொடர் மழை காரணமாக நெல்லை பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க பேரூராட்சி நிர்வாகம் தடைவிதிக்கப்பட்டுள்ளது.