K U M U D A M   N E W S
Promotional Banner

திருப்பதியில் இனி லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் - தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இனி பக்தர்களுக்கு லட்டுடன் புத்தகமும் பிரசாதமாக வழங்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. சுவாமி தரிசனத்திற்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் எனவும், புத்தகம் அச்சிடுவதற்கான செலவை ஏற்க நன்கொடையாளர்கள் முன் வந்துள்ளனர் எனவும் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி போறீங்களா? இந்த செய்தி உங்களுக்குத்தான்.. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை மற்றும் கரடிகளின் நடமாட்டம் இருப்பதால் இரவு 9.30 மணி முதல் காலை 5 மணி வரை அப்பகுதி வழியாக நடந்து செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

திருப்பதி செல்வோர் கவனத்திற்கு..! தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

திருப்பதியில் தொடர் மழை காரணமாக மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில், மலைப்பாதையில் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.  

திருப்பதி லட்டு விவகாரம்.. ஏ.ஆர்.பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் மீது வழக்குப்பதிவு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு கலப்பட நெய் வழங்கியதாக திண்டுக்கல் ஏ.ஆர்.பால் உற்பத்தி பொருட்கள் நிறுவனம் மீது தேவஸ்தானம் சார்பில் திருப்பதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

திருப்பதி லட்டு விவகாரம்... முக்கிய வேண்டுகோள் வைத்த தேவஸ்தானம்

வீடுகளில் விளக்கேற்றி மந்திரம் படித்தால் கலப்பட நெய்யில் தயாரிக்கப்பட்ட லட்டை சாப்பிட்ட தோஷம் விலகும் என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

லட்டு விவகாரம்... திருப்பதி தேவஸ்தானம் அவசர ஆலோசனை

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தேவஸ்தான முக்கிய நிர்வாகிகள், செயல் அதிகாரி உள்ளிட்டோருக்கு திருப்பதி தேவஸ்தானம் அழைப்பு விடுத்துள்ளது.

கடவுளை வைத்து அரசியல் செய்கிறார் சந்திர பாபு நாயுடு.. - ஜெகன் மோகன் குற்றச்சாட்டு

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில் ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் இதுதொடர்பாக விளக்கமளித்துள்ளார்