K U M U D A M   N E W S
Promotional Banner

பத்திரப்பதிவு

பரந்தூர் விமான நிலையத்திற்கு பத்திரப்பதிவு தொடக்கம்..அரசியல் தலைவர்களை சந்திக்க போராட்டக்குழு முடிவு!

பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் தர 5 கிராம மக்கள் சம்மதம் தெரிவித்த நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்க போராட்டக்குழு முடிவு செய்துள்ளது.

பரந்தூர் விமான நிலைய இடத்திற்கான பத்திரப்பதிவு தொடங்கியது

5 கிராமங்களைச் சேர்ந்த 19 பட்டாதாரர்களிடமிருந்து நிலம் எடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து, 9.22கோடி மதிப்புடைய நிலத்தினை தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனத்திற்கு பதிவு செய்து கொடுக்கப்பட்டது.

1521 கோடி.. 1222 வழக்கு.. பதிவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்!

தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் நிலம் கையகப்படுத்தியதற்கு,  ஆயிரத்து 521 கோடியே 83 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டியுள்ளதாகவும், இது சம்பந்தமான உத்தரவுகளை அமல்படுத்தக் கோரி ஆயிரத்து 222 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.