K U M U D A M   N E W S

பஹல்காம் தாக்குதல்: முப்படைகளின் தளபதிகளோடு பிரதமர் அவசர ஆலோசனை!

இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் உச்சகட்ட பதற்றம் நிலவுவதால், டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.

பஹல்காமில் தாக்குதல் நடத்திய ஒருவரையும் விடமாட்டோம்” – ராஜ்நாத் சிங்

காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒருவரையும் விடமாட்டோம். தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பின்னால் இருந்து சதி செய்தவர்களை எவரையும் விட மாட்டோம்.