K U M U D A M   N E W S

உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு.. யார் இந்த பி.ஆர்.கவாய்?

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷன் ராமகிருஷ்ணா கவாய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசு தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பங்கேற்றனர்.