தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக மே.9-ம் தேதி முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்கூட்டியே மே.8-ம் தேதி வெளியாகிறது.
மாநில சுயாட்சி நாயகனுக்கு மகத்தான பாராட்டு விழா எனும் தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெற இருப்பதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
அரசுப் பள்ளியின் பாரமரிப்பு இல்லாமல் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து பலியான மாணவனின், தந்தைக்கு 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை அசோக் நகர், சைதாப்பேட்டை அரசு பள்ளியில் மகாவிஷ்ணு நடத்திய ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி சர்ச்சையானது. இதைத்தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் அசோக் நகர், சைதாப்பேட்டை பள்ளிகளின் நிலவரம் குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விரைவில் அவர் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணு பேசிய வீடியோ பரம்பொருள் பவுண்டேஷன் என்ற யூடியூப் சேனலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது
மகா விஷ்ணு பள்ளியில் பேசுவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் தங்களிடம் அனுமதி பெறவில்லை என்று தென் சென்னை மாவட்ட கல்வி அலுவலர் சரஸ்வதி மற்றும் சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.