K U M U D A M   N E W S

மாசுபட்ட இருமல் மருந்து மரணங்கள்: 6 மாநில உற்பத்தி அலகுகளில் CDSCO ஆய்வு; தமிழகத்தில் விற்பனைக்குத் தடை!

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, CDSCO அமைப்பு 6 மாநில மருந்து உற்பத்தி அலகுகளில் ஆய்வு தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 'கோல்ட்ரிஃப்' (Coldrif) இருமல் சிரப் மாதிரிகளில் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) அளவு அதிகமாக இருந்ததால், அதன் விற்பனைக்கு உடனடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரூர் விவகாரம்: விஜய் தவறு செய்திருந்தால் நடவடிக்கை உறுதி - சபாநாயகர் அப்பாவு கடுமையான விமர்சனம்!

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் விஜய்யின் காலதாமதமே விபத்துக்குக் காரணம் என்று சபாநாயகர் அப்பாவு காட்டமாகக் குற்றம் சாட்டிய நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் தவறு செய்திருந்தால் அரசு நடவடிக்கை எடுப்பது உறுதி என்றும் எச்சரித்தார்.