K U M U D A M   N E W S

தீவுத்திடல் கண்காட்சி வழக்கு: பார்க்கிங் நிலத்தில் இடையூறு செய்யக்கூடாது - உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

சென்னை தீவுத்திடலில் தாஜ்மகால் மெகா கண்காட்சிக்கான பாரக்கிங் நிலத்தில் இடையூறு செய்யக் கூடாது என தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, சென்னை மாநகராட்சி உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரிடியம் மோசடி: மூளையாகச் செயல்பட்ட சாமிநாதன் கைது - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்!

இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூளையாக செயல்பட்ட சாமிநாதனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

விஜய் பிரச்சாரத்திற்கு அரசு முட்டுக்கட்டை போடுகிறது - நிர்மல்குமார் பரபரப்புப் பேட்டி!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு மட்டும் காவல்துறை 23 நிபந்தனைகளை விதித்துள்ளது, திமுக அரசுக்கு ஆதரவாகச் செயல்படுவதைக் காட்டுகிறது என்று மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளர்.

காவல் நிலையத்தில் போதையில் ரகளை: காவலர் பிரபு மீது உயர் அதிகாரிகள் விசாரணை!

காவல் ஆய்வாளர் மற்றும் சக போலீசாரை தரக்குறைவாகப் பேசியதாகக் குற்றச்சாட்டு; வீடியோ வெளியாகிப் பரபரப்பு!

நடிகை ஹன்சிகா மீது வரதட்சணை புகார்: FIR-ஐ ரத்து செய்ய கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி மீது அவரது சகோதரரின் மனைவி அளித்த வரதட்சணைக் கொடுமைப் புகார் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை (FIR) ரத்து செய்ய மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனை மீது சிகிச்சை அலட்சியம் புகார்: முதல்வர் தனிப்பிரிவுக்கு நோட்டீஸ் - மருத்துவமனை முதல்வர் விளக்கம்!

கோவை அரசு மருத்துவமனையில் தனது தந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனவும் கிரிஸ்டல் ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி! பால் பண்ணை அமைக்க அண்ணாமலை திட்டம்!

தன்னைப்பற்றி பரவி வரும் தவறான தகவல்களுக்கு, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார். தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்காகவும், தான் ஆர்வத்துடன் ஈடுபட்டு வரும் இயற்கை விவசாய முயற்சிகளை விரிவாக்கவும் சில விஷயங்களை மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

கோவையில் வீல் சேர் பிரச்சனைக்குத் தீர்வு.. சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவு!

கோவையில் தனது மகனால் தோளில் தாங்கியபடி அழைத்துச் செல்லப்பட்ட முதியவரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, ₹1.3 லட்சம் மதிப்பில் 10 வீல் சேர்கள் மற்றும் 10 ஸ்ட்ரெச்சர்கள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லை துணி, பழக்கடையில் பயங்கர தீ விபத்து |Fire Accident | Kumudam News

நெல்லை துணி, பழக்கடையில் பயங்கர தீ விபத்து |Fire Accident | Kumudam News

13 ஆண்டுகளுக்கு பிறகு.. 'கும்கி 2' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கும்கி 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மீனவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது- செல்வப்பெருந்தகை கண்டனம்!

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலுக்கு செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.

வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை வெளியிட்ட சிசிடிவி காட்சி | Kovai | CCTV Video | Kumudam News

வீல் சேர் விவகாரம் - மருத்துவமனை வெளியிட்ட சிசிடிவி காட்சி | Kovai | CCTV Video | Kumudam News

கோயம்பேட்டில் அரசு பேருந்து திருட்டு.. நெல்லூரில் பிடிபட்ட ஒடிசா இளைஞர்!

கோயம்பேட்டில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பேருந்தை திருடி சென்ற காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத ஒடிசா இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

தமிழகம் முழுவதும் போத்தீஸ் கடைகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!

பிரபலமான போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் அதன் உரிமையாளருக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

வரலாற்றில் புதிய உச்சம்: தங்கம் விலை அதிரடி உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

சென்னையில் இன்று ஒரே நாளில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்குக் கனமழை: சென்னைக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்கு டெல்டா மாவட்டங்கள் உட்பட வட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாஞ்சில் விஜயன் மீது பாலியல் புகார்: சர்ச்சைக்குப் பதிலளித்த நாஞ்சில் விஜயன், மரியா தம்பதியினர்!

நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.

திமுக பெண் கவுன்சிலர் விவகாரம் - வன்கொடுமை வழக்குபதிவு | DMK Counselor | Attack | Kumudam News

திமுக பெண் கவுன்சிலர் விவகாரம் - வன்கொடுமை வழக்குபதிவு | DMK Counselor | Attack | Kumudam News

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin

தமிழ்நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்க தமிழக அரசு முயற்சி -முதலமைச்சர் | CMMK Stalin

நேபாளத்தில் முன்னாள் பெண் நீதிபதி தலைமையில் இடைக்கால அரசு!

நேபாளத்தில் Gen Z இளைஞர்களின் போராட்டத்தால் கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததை அடுத்து இடைக்கால அரசை வழிநடத்த முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக தொண்டர்களை அசைக்க முடியாது; 2026-ல் எடப்பாடியார் ஆட்சி மலரும் - ஆர்.பி.உதயகுமார் பதிலடி

எடப்பாடியாரின் எழுச்சிப் பயணத்தைக் கண்டு வயிற்றெரிச்சல் கொண்டவர்கள் அதிமுகவிற்குப் பின்னடைவை ஏற்படுத்த நினைத்தால், அம்மாவின் ஆன்மாவும் தமிழக மக்களும் அவர்களுக்குத் தோல்வியைத் தான் தருவார்கள் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஆவேசமாக பதிலடி கொடுத்துள்ளார்.

நயன்தாரா வழக்கு - தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News

நயன்தாரா வழக்கு - தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News

'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லி'- நடிகர் பார்த்திபன் நெகிழ்ச்சி பதிவு!

'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

ED Raid: சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Chennai | Kumudam News

ED Raid: சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை | ED Raid | Chennai | Kumudam News