K U M U D A M   N E W S

நீலகிரியில் கனமழை.. மலைப்பயிர்கள் பெரும் சேதம்.. விவசாயிகள் கவலை!

நீலகிரி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் முத்தோரை பாலடா அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலைக்காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களில் மழைநீர் தேங்கி பல ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள கேரட், மலைப்பூண்டு, பீட்ரூட் பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது.