K U M U D A M   N E W S

27 சவரன் நகை கொள்ளை.. போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றச்சாட்டு!

திருப்பத்தூர் மாவட்டம் தோரணம்பதியில், கூலித் தொழிலாளி மோகன் வீட்டில் வைத்திருந்த 27 சவரன் நகை மற்றும் ரூ. 50 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் சாவியை வெளியே மறைத்து வைப்பதை நோட்டமிட்டு மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

10-க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமண மோசடி செய்த மாதம்பட்டி ரங்கராஜ் - மகளிர் ஆணையத்தில் பரபரப்புப் புகார்!

பிரபல சமையற்கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கி மோசடி செய்ததாக ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இன்று மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.