K U M U D A M   N E W S

கோவைப் பெரிய கடை வீதியில் நடுரோட்டில் தள்ளுவண்டி கடை: போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி!

கோவைப் பெரிய கடை வீதியில், சாலையின் நடுவே தள்ளுவண்டிக் கடை ஆக்கிரமிப்பால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 'நோ பார்க்கிங்' விதிமீறலுக்கு அபராதம் விதிக்கும் காவல்துறை, சாலையை மறித்துக் கடை அமைப்பவருக்கு மட்டும் எப்படி அனுமதி எனக் பொதுமக்கள் சிசிடிவி காட்சிகளுடன் புகார் அளித்துள்ளனர்.