K U M U D A M   N E W S

வடபழனி முருகன் கோவில் வழக்கு: பக்தரின் மனுமீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை வடபழனி முருகன் கோவிலின் வாகன நிறுத்துமிடங்களில் திருமண மண்டபம் மற்றும் பணியாளர் குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.