ஆன்மிகம்

மகர ராசி 2026 புத்தாண்டுப் பலன்கள்: எதிர்பார்ப்புகள் ஈடேறும் பொற்காலம்!

2026-ஆம் ஆண்டு மகர ராசியினருக்கு வாழ்வின் பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களையும், நீண்ட நாள் கனவுகள் நனவாகுவதையும் உறுதி செய்யும் ஆண்டாக அமையவுள்ளது.

மகர ராசி 2026 புத்தாண்டுப் பலன்கள்: எதிர்பார்ப்புகள் ஈடேறும் பொற்காலம்!
capricorn
தினந்தோறும் ஒரு ராசிபலன் - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

இன்றைய தினம் மகரம் ராசி

எதிர்பார்ப்புகள் ஈடேறும்! 75%

இந்த வருடத்துல உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தில் சனிபகவான் இருக்கார்ங்க. வருடத்தின் நடுவே ஜூன் மாதத்தில் குருபகவான் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்துக்கு வருகிறார்ங்க. அவரது ஏழாம் பார்வை உங்க ராசியில் பதியுது. மேலும் வருடத்தின் கடைசியில உங்க ஜன்ம ராசிக்கு ராகுவும், ஏழாமிடத்துக்கு கேதுவும் வர இருக்காங்க. இத்தகைய அமைப்பின் காரணமா இது உங்க வாழ்வில் எதிர்பார்ப்புகள் ஈடேறும் காலகட்டமாக இருக்கும்க. அதேசமயம் வார்த்தைகளில் நிதானம், செயலில் பொறுமையே உயர்வுகளை நிலைக்கச் செய்யும்க.

அலுவலகத்துல, இதுவரை சந்தித்த அல்லல்கள் நீங்கத்தொடங்கும்க. திறமைக்கு உரிய மேன்மை தடைநீங்கிக் கைகூடும்க. உங்க பொறுப்புகளை பிறரை நம்பி ஒப்படைக்க வேண்டாம்க. மற்றவங்க குறையை பெரிதுபடுத்துறதை தவிர்த்தா, உங்க பெருமை தொடர்ந்து உயரும்க. சிலருக்கு புதிய பணி வாய்ப்பும் அதனால பெருமையும் ஏற்படும்க.

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!