கரூரில் ஆடி நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவிலில் 3 லட்ச ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டு அலங்காரம் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு அபிஷேக பூஜைகள்
ஆடி மாதம் முழுவதும் அம்மன் கோவில்களில் பல்வேறு விழாக்கள் சிறப்புப் பூஜைகள் நடைபெறுவது வழக்கம் அதிலும் குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
ஆடி மாதம் நான்காவது வெள்ளியை முன்னிட்டு வெங்கமேடு பகுதியில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவில் அம்மனுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது.
3 லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்
தொடர்ந்து அம்மனுக்கு மூன்று லட்ச ரூபாய் புதிய நோட்டுகளில் அம்மனுக்கு பண அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அம்மன் வீற்றிருக்கும் பீடம் மற்றும் சுவர் முழுவதும் பண நோட்டுகள், மாலைகள் போன்று சுவர்களை மறைத்தும் 500 ரூபாய், 200 ரூபாய், 100 ரூபாய், 50 ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இது காண்பவர் மிகவும் கவர்ந்து ஏராளமாகப் பக்தர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு காமாட்சி அம்மனை தரிசனம் செய்தனர்.