ஆன்மிகம்

சிவபெருமானின் அருளைப் பெறும் பிரதோஷ விரதம்.. விரத வழிமுறைகள்!

பிரதோஷம் என்பது இந்து மதத்தில் திரயோதசி திதியன்று சிவபெருமானை வழிபடும் ஒரு விரத முறையாகும். இந்த விரதம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஆகிய இரண்டு நாட்களில் வருகின்ற திரையோதசித் திதியில் சூரியன் மறைவுக்கு முன் மற்றும் பின் நிகழும் உள்ள நேரத்தில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரத காலத்தில் சிவபெருமானை வழிபடுவது சிறப்பானதாக கூறப்படுகிறது.

சிவபெருமானின் அருளைப் பெறும் பிரதோஷ விரதம்.. விரத வழிமுறைகள்!
சிவபெருமானின் அருளைப் பெறும் பிரதோஷ விரதம்.. விரத வழிமுறைகள்!
புராணக் கதைகளில் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடையும் பொழுது, ஆலகால விஷத்தை வாசுகி பாம்பு வெளிப்படுத்தியது.  இதனைக் கண்டு பயந்த தேவர்களும், அசுரர்களும், சிவபெருமானை தங்களை காக்கும் படி வழிபாடு நடத்தி உள்ளன. இதனால் ஆலகால விஷத்தை  சிவபெருமான் உட்கொண்டதாக கூறப்படுகிறது. சிவபெருமான் உட்கொண்ட விஷம் வயிற்றினை அடையாமல் இருக்க பார்வதி சிவபெருமான் கழுத்தினை இருக்க பிடித்தார்.

அப்போது முதல் சிவபெருமான் கழுத்தில் பெருமையாக மாறியது என்ற புராண கதைகள் கூறுகின்றன. மூவுலகிற்கும் ஏற்பட இருந்த மிகப்பெரிய பேரழிவை சிவபெருமான் காத்த அந்த நேரத்தை பிரதோஷ நேரமாக கருதி பக்தர்கள் காலம் காலமாக பிரதோத விரதத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

தினசரி பிரதோஷம், மாத பிரதோஷம், நட்சத்திர பிரதோஷம், பூரண பிரதோஷம், மகா பிரதோஷம் என பிரதோஷம் மொத்தம் 20 வகையாக கூறப்படுகிறது.

பிரதோஷ காலத்தில் ஒருவர் செய்த பாவங்களை தீர்த்து மோட்சத்தை அடைய செய்யப்படும் வழிபாடு முறையாக கூறப்படுகிறது. அதாவது பிரதி+தோஷம் என்ற இரண்டு வார்த்தைகளையும் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொரு மாதந்தோறும் வரும் பிரதோஷத்தை காட்டிலும் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய நான்கு மாதங்களில் வரும் சனி பிரதோஷ நாட்களை மிகவும் பிரசித்தி பெற்ற நாட்களாக கருதி அன்றைய தினம் விரதம் மேற்கொள்வர். பிரதோஷ நேரம் குறிப்பாக மாலை 4:30 மணிக்கு மேல் இரவு 7 மணி வரை கடைபிடிக்கப்படுகிறது.