சினிமா

அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சாமி தரிசனம்...செல்ஃபி எடுத்துக்கொண்ட பக்தர்கள்

செந்தூரப்பூவே, இணைந்த கைகள் உள்ளிட்ட திரைப்படங்களை நடித்த பிரபல திரைப்பட நடிகர் ராம்கி அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

 அண்ணாமலையார் கோவிலில் பிரபல நடிகர் சாமி தரிசனம்...செல்ஃபி எடுத்துக்கொண்ட பக்தர்கள்
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ராம்கி சாமி தரிசனம்
பிரபல நடிகர் சாமி தரிசனம்

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரைப்பட பிரபலங்களும் அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் செந்தூரப்பூவே, இணைந்த கைகள், மருதுபாண்டி, பறவைகள் பலவிதம், சின்னபூவே மெல்லபேசு உள்ளிட்ட திரைப்படங்களிலும் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகர் ராம்கி இன்று அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.முன்னதாக அண்ணாமலையார் சன்னதியில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் தரிசனம் மேற்கொண்ட அவர், தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலையம்மன் சன்னதியில் சாமி தரிசனம் செய்தார்.

செல்ஃபி எடுத்துக்கொண்ட பக்தர்கள்

தொடர்ந்து அருணாச்சலேஸ்வரர் கோவில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து யாகசாலை அருகே அமர்ந்து சிறிது நேரம் தியானத்தில் மூழ்கிய அவர், தொடர்ந்து கோவிலுக்கு வந்திருந்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருடனும் செல்ஃபி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அதோடு மட்டுமல்லாமல் கோவில் ஊழியர்கள் அவருடன் போட்டி போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.