'துரந்தர்' படப் பாடல் மூலம் கவனம் ஈர்த்த நடிகை ஆயிஷா கான், திரைத்துறையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாதுகாப்புச் சவால்கள் மற்றும் சமூக வலைதள அச்சுறுத்தல்கள் குறித்துத் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தி பிக் பாஸ் மற்றும் 'பல்வீர் ரிட்டர்ன்ஸ்' தொடர் மூலம் அறிமுகமான ஆயிஷா கான், தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். ஒரு நடிகையாகப் புகழின் உச்சத்தில் இருந்தாலும், நிஜ வாழ்க்கையில் தான் சந்திக்கும் அத்துமீறல்கள் தன்னை நிலைகுலைய வைப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
படப்பிடிப்பு தளத்திலேயே நேர்ந்த அதிர்ச்சி
சமீபத்தில் படப்பிடிப்பு ஒன்றில் இருந்தபோது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்குத் தொடர்ந்து ஆபாசமான 'வாய்ஸ் மெசேஜ்'களை அனுப்பிய நபர் யார் என்பதை ஆயிஷா கண்டறிந்துள்ளார். அதிர்ச்சிகரமாக, அந்த நபர் அதே படப்பிடிப்பு தளத்தில் வேலை பார்த்த ஒருவர் என்பது தெரியவந்துள்ளது. திரைத்துறையில் உடன் பணியாற்றுபவர்களே இத்தகைய செயல்களில் ஈடுபடுவது பெண்கள் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
சமூக வலைதள அத்துமீறல்கள்
சமூக வலைதளங்களில் தனது உடல் தோற்றம் குறித்து ஆபாசமான கருத்துக்கள் பகிரப்படுவதாகவும், நாள்தோறும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் வருவதாகவும் ஆயிஷா கான் கூறியுள்ளார். "இத்தகைய மிரட்டல்கள் தற்போது ஒரு சாதாரண விஷயமாக மாறிவிட்டது" என்று ஆதங்கம் தெரிவித்துள்ள அவர், மிரட்டல் விடுப்பவர்கள் மீது எந்தவிதமான கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கடுமையான நடவடிக்கை தேவை
பிரபலம் என்பதற்காகவே பொதுவெளியிலும், இணையத்திலும் இத்தகைய அத்துமீறல்களைச் சந்திக்க வேண்டியுள்ளதாகக் கூறியுள்ள அவர், இது போன்ற நபர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாகப் பாய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தனது உடை மற்றும் நடைக்காக விமர்சிக்கப்படுபவர்களுக்குப் பதிலடி கொடுத்துள்ள ஆயிஷா, பெண்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும் எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

LIVE 24 X 7