சினிமா

விஜய்க்கு பிடித்த உணவு எது தெரியுமா? பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!

'ஜன நாயகன்' படப்பிடிப்பில் விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சுவாரசியமான தகவல்களை நடிகை மமிதா பைஜூ அளித்துள்ளார்.

விஜய்க்கு பிடித்த உணவு எது தெரியுமா? பிரபல நடிகை பகிர்ந்த தகவல்!
Mamitha Baiju
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம், ஜனவரி 9-ம் தேதி வெளியாக வேண்டிய இப்படம், தணிக்கை சான்றிதழ் தாமதத்தால் இன்னும் வெளியாகவில்லை. இது விஜய்யின் கடைசி படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மமிதா பைஜுவின் நேர்காணல்

இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மமிதா பைஜு, விஜய்யுடன் பணிபுரிந்த அனுபவத்தை ஒரு நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், விஜய் படப்பிடிப்பு தளத்திற்குச் சரியான நேரத்திற்கு வருவார் என்றும், மிகவும் நிதானமான மற்றும் இனிமையான இயல்புடையவர் என்றும் தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு பிடித்த உணவு

மேலும் அவர் கூறுகையில், "விஜய் சார் நாம் சொல்லும் சிறிய விஷயங்களைக் கூட நினைவில் வைத்திருப்பார். சில மாதங்கள் கழித்துச் சந்தித்தாலும் அதைப் பற்றி விசாரிப்பார். அவர் மதிய உணவாக எப்போதும் 'சால்மன்' மீன் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். உணவு இடைவேளைக்குப் பிறகு அவரிடம் இது குறித்து நான் கேட்கும்போதெல்லாம் புன்னகையுடன் பதிலளிப்பார்" என்று மமிதா பைஜு கூறியுள்ளார்.

படத்தின் விபரங்கள்

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் பாபி தியோல், கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், பிரியாமணி, பூஜா ஹெக்டே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜெகதீஷ் பழனிசாமி மற்றும் லோஹித் என்.கே ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

Image