சினிமா

"நான் சொன்ன மாதிரி பணியாச்சா".. வைரலாகும் அஜித் - ஷாலினி வீடியோ!

தனது மகன் கால்பந்து பயிற்சி பெறும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு நடிகர் அஜித்குமார் பிரியாணி சமைத்துக் கொடுத்து மகிழ்ந்தார்.


Ajith & Shalini
தனது மகன் கால்பந்து பயிற்சி பெறும் மையத்தில் பணிபுரிபவர்களுக்கு நடிகர் அஜித்குமார் பிரியாணி சமைத்துக் கொடுத்து மகிழ்ந்தார்.

நடிகர் அஜித் குமார் தன் கார் பந்தயங்களை முடித்துவிட்டு துபாயிலிருந்து அண்மையில் சென்னை திரும்பினார். தற்போது, தன் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருவதுடன் ஏகே-64 திரைப்படத்திற்காகத் தயாராகி வருகிறார்.

இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கான ஷூட்டிங்கை இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டவர். அவர் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். அண்மையில் அந்த பயிற்சி மையத்திற்கு மனைவி ஷாலினியுடன் சென்ற அஜித்குமார், தனது மகன் கால்பந்து விளையாடியதை கண்டு ரசித்தார்.

தொடர்ந்து பயிற்சி மைய நிர்வாகிகளுக்கு அஜித் கமகமவென பிரியாணி சமைத்துக் கொடுத்து அசத்தினார். அப்போது, "நான் சொன்னபடி சமைத்தீர்களா?" என்று அஜித்திடம் ஷாலினி கேட்டார். பயிற்சி மைய நிர்வாகிகளுடன் செல்பி எடுத்துக் கொண்ட ஷாலினி, "அஜித் இங்க பாரு" என்றதும் அஜித், "எங்கே" எனக் கேட்கும் வீடியோ + சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.