சினிமா

"எனக்கு திருமணம் ஆகவில்லை": புதிய சர்ச்சையில் சிக்கிய நடிகர் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது தோழி கெனிஷா பிரான்சிஸ் ஆகியோர் கோவாவில் சொத்து வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Ravi Mohan
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தி ரவியை விட்டுப் பிரிவதாக அறிவித்ததில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வரிசையில், தற்போது கோவாவில் சுமார் 42 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒரு சொத்தை அவர் வாங்கியிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் புதிய முதலீடு அவரது நெருங்கிய தோழியான பாடகி கெனிஷா பிரான்சிஸுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஆவணங்களில் "திருமணம் ஆகாதவர்" எனத் தகவல்?

இந்தச் சொத்து வாங்கிய விவகாரத்தில் மிக முக்கியமான சர்ச்சையாகப் பார்க்கப்படுவது, அந்தச் சொத்து ஆவணங்களில் ரவி மோகன் தன்னை "திருமணம் ஆகாதவர்" (Unmarried/Single) எனக் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படும் தகவல் தான். ஆர்த்தி ரவியுடனான விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் சூழலில், சட்டப்பூர்வமாகப் பிரியாத நிலையில் இப்படி ஒரு தகவலை ஆவணங்களில் பதிவு செய்தது சரியா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு தற்செயலான பிழையா அல்லது திட்டமிட்ட ஒன்றா என இணையதளங்களில் விவாதங்கள் கிளம்பியுள்ளன.

கெனிஷாவுடன் தொடரும் கிசுகிசுக்கள்

ஏற்கனவே ஆர்த்தி ரவி, தனது திருமண முறிவுக்கு "மூன்றாம் நபர்" ஒருவரே காரணம் என மறைமுகமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில், கெனிஷாவுடன் இணைந்து ரவி மோகன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் தற்போது கோவாவில் இருவரும் சேர்ந்து சொத்து வாங்கியதாக வெளியாகும் தகவல்கள், இவர்களது உறவு குறித்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்த்துள்ளன.

மௌனம் காக்கும் ரவி மோகன் தரப்பு

இந்தச் சொத்து விவகாரம் மற்றும் "சிங்கிள்" எனக் குறிப்பிட்டது தொடர்பான புகார்கள் குறித்து ரவி மோகன் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இதனால், இந்த விவகாரம் வெறும் வதந்தியா அல்லது சட்ட ரீதியான சிக்கல்களை உருவாக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.