மகள் அதிராகம்:ரமணி பிரபா தேவி
தம்முடைய மகள் அதிராவின் ஒரு வயதில் தொடங்கி நான்கரை வயது வரையிலான மழலை மொழியை, பொக்கிஷ நிமிடங்களை எழுத்து வடிவில் அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார். க.சே.ரமணி பிரபா தேவி. குழந்தையின் வாழ்வியல் பொழுதுகளை, மழலைக் குறும்புகளை பிற அம்மாக்கள் போல நாள்தோறும் கடந்து செல்லாமல், அவற்றைக் கவனித்து மனதிலேற்றி சுவையாக பதிவுசெய்துள்ளார், நூலாசிரியர்.
வெளியீடு: படி வெளியீடு 1080 ஏ, ரோஹிணி பிளாட்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர் மேற்கு, சென்னை - 600 078. போன்: 99404 46650, பக்கங்கள்: 108, விலை: ரூ. 130
பயணங்களில் உலவும் வாழ்க்கை: நீலவேணி
நிறைமனம் கொண்ட இந்நூலாசிரியர் நீலவேணி, தன் வாழ்வின் ஒரு பகுதியாகவே பயணங்களின்போது கண்ட காட்சிகள், சந்தித்த மனிதர்கள், காதில் விழுந்த குரல்கள், உரையாடல்கள், ஓசைகள் என அனைத்தையும் மிக நேர்த்தியாக பதிவு செய்துள்ளார். தமிழில் இலக்கியம் எழுதுபவர்கள் குறைவு. இப்போது நீலவேணியோடு சேர்ந்து அதன் எண்ணிக்கைக் கூடியிருக்கிறது.
வெளியீடு: தமிழ் அலை, 3, சொக்கலிங்கம் காலனி, தேனாம்பேட்டை, சென்னை -600 086. போன்: 77085 97419, பக்கங்கள்: 192, விலை: ரூ.200
உற்றுயிர்த்துத் தேடலாகி: ஜெ.விஜயாராணி ஐ.ஏ.எஸ்
மௌளம் மகத்தானது. அன்பு அபரிமிதமாக வெளிப்படும்போது. சொற்கள் தோற்றுப்போகின்றன. உள்ளத்தை உதடுகளால் மொழிபெயர்க்க முடியாதபோது சொற்கள் ஊனமாகிவிடுகின்றன. அளவற்ற அன்பின் முன்பு, மௌனமாகிவிடும் மனதை கவிஞர் ஜெ.விஜயாராணி ஐ.ஏ.எஸ்., இத்தொகுப்பில் உள்ள 'நீயும் நானும்' எனும் கவிதையில் அழகுறப் பிரதிபலிக்கிறார்.
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ், 6 மகாவீர் காம்ப்ளக்ஸ், முனுசாமி சாலை, கே.கே.நகர், சென்னை 600 078. போன்: 87545 07070, பக்கங்கள்: 112, விலை: ரூ.150
சொல்லினும் நல்லாள்: சக்தி ஜோதி
நவீன கவிதையுலகில் தனக்கென்று ஓரிடத்தை தனது கவிதைகள் வாயிலாக ஏற்படுத்திக்கொண்டவர், கவிஞர் சக்தி ஜோதி. இத்தொகுப்பில் உள்ள அனைத்து கவிதைகளும் அன்றாட வாழ்வியலைப் புதிய கோணத்தில் பார்ப்பவை. வாசிப்பவரை சிந்திக்க வைக்கும். நவீன கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது.
வெளியீடு: தமிழ்வெளி, 1- பாரதிதாசன் தெரு, ஸ்ரீனிவாசா நகர், மலையம்பாக்கம், சென்னை - 600 122., போன்: 90940 05600, பக்கங்கள்: 80, விலை: ரூ.100
(தொகுப்பு: மதிபாரதி, குமுதம் சிநேகிதி, 15.05.2025)
சிநேகிதிகளே நீங்கள் எழுதியுள்ள நூலும் 'சிநேகிதி லைப்ரரி பகுதியில் இடம்பெற, 2 பிரதிகள் அனுப்பவும். அனுப்ப வேண்டிய முகவரி ஆசிரியர், குமுதம் சிநேகிதி, 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை-600 010.