ததமிழக வெற்றிக் கழகம் ஒரு பெரும் மாநில கட்சியாக பரிணமிப்பதற்கான அனைத்து வேலைகளையும் செய்து வரும் தவெக தலைவர் விஜய், பொதுக்குழு மாநாடு, பூத் கமிட்டி மாநாடு என மாதம் ஒரு நிகழ்வை நடத்தி பேசுபொருளாகி விடுகிறார். ஒருபக்கம் கட்சி ரீதியாக 120 மாவட்டங்களை பிரித்து அதற்கான செயலாளர்கள் மற்றும் தலைவர்களை நியமித்துள்ள விஜய், மறுபக்கம் பூத் கமிட்டி லெவல் வரை கட்சியை வலுப்படுத்த பூத் கமிட்டி ஏஜெண்ட் மாநாட்டை 5 முக்கிய நகரங்களில் நடத்த முடிவு செய்துள்ளார்.
அதன்படி கோவையில் வெற்றிகரமாக பூத் கமிட்டி மாநாடு நடந்து முடிந்த நிலையில் திருச்சி, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் விரைவில் மாநாடு நடத்த தவெக தயாராகிக் கொண்டிருக்கிறதாம். இப்படி கட்சிப் பணிகள் ஒருபக்கம் தீவிரமாக இருந்தாலும், ஷூட்டிங்கிலும் படுபிசியாக இருந்த விஜய் ஜனநாயகன் பட ஷூட்டிங்கை முழுவதுமாக முடித்துவிட்டாராம்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டை விட குறைவாகவே உள்ள நிலையில், முழுவீச்சாக அரசியல் களத்தில் குதிக்க விஜய் தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, தனது அரசியல் சுற்றுப்பயணம் குறித்து கவனம் செலுத்தி வருகிறாராம் விஜய். அதாவது, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணத்தை ஜூலை மாதம் நடுவே விஜய் தொடங்கலாம் என தகவல்கள் வெளியாகியிருக்கிறது. முதல் கட்டமாக 42 நாட்கள் தொடர் சுற்றுப்பயணத்தில் கட்சி ரீதியாக பிரிக்கப்பட்டுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த மக்களை சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இப்படி மொத்தமாக 120 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள பக்கா ஸ்கெட்ச் போட்டு தவெக தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த வகையில், அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய மாவட்டம் என்று பெயர் கொண்ட மத்திய மண்டலமான திருச்சியில் இருந்து அல்லது தென் மண்டல மாவட்டமான மதுரையில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க தலைமைக் கழக நிர்வாகிகள் தலைமைக்கு யோசனைக் கொடுத்துள்ளார்களாம்.
இந்த நிலையில், அதற்கான பணிகளை தொடங்குமாறு மாவட்ட நிர்வாகிகளுக்கு தலைமைக் கழகம் அறிவுறுத்தியுள்ளதாம். அதுமட்டுமல்லாமல், நிர்வாகிகளுக்கு பெர்சனலாக அறிவுறுத்தல்களை தவெக தலைவர் வெளியிட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், கட்சி குறித்து வரும் விமர்சனங்களுக்காக வாக்குவாதத்தில் யாரும் ஈடுபட வேண்டாம் என்றும், 2026 தேர்தலை குறிவைத்தே நமது முழுக்கவனமும் இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் இப்பணிகளை திறம்பட செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில், இந்த அரசியல் சுற்றுப்பயணத்திற்கு கிடைக்கும் ஆதரவைப் பொறுத்தே தவெகவின் பிரசார வியூகங்களும், கூட்டணி கணக்குகளும் அமையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. எனவே, விஜய்யின் சுற்றுப்பயணம் வெறும் சுற்றுப்பயணமாக இருக்குமா? அல்லது திருப்புமுனையை ஏற்படுத்துமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.