2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக கூட்டணிகுறித்த முக்கிய ஆலோசனைக் கூட்டம் நெல்லையில் நேற்று நடைபெற்றது.பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் உத்திகள் மற்றும் பிரச்சார வியூகங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
முக்கியத்தலைவர்கள் பங்கேற்பு
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுக தரப்பிலிருந்து பங்கேற்றனர். பாஜக தரப்பில், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கூட்டணிகுறித்து ஆலோசனை
ஏப்ரல் 2025-ல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்தபோது, அதிமுக மற்றும் பாஜக கூட்டணி உறுதியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர், இந்தக் கூட்டம் முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது. மேலும், எடப்பாடி பழனிசாமியின் 'மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்' என்ற சுற்றுப்பயணத்தின் தொடக்க நிகழ்வில் பாஜக தலைவர்களான நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
பாஜக மாநாடு
வருகிற ஆகஸ்ட் 17, 2025 அன்று நெல்லையில் நடைபெற உள்ள பாஜக மாநில மாநாட்டில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்வது தொடர்பாகவும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் பல்வேறு ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 'உடன்பிறப்பே வா' என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஆகஸ்ட் 9 அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. மேலும், பாமக நிறுவனர் ராமதாஸ் சார்பில், ஆகஸ்ட் 17 அன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்துள்ளார்
சட்டமன்ற தேர்தலை முதன்முறையாக எதிர்கொள்ளும் தமிழக வெற்றி கழகம் சார்பில், கடந்த வாரம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தி, உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக சார்பில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ஏற்கனவே கூட்டணி பேச்சுவார்த்தையை உறுதிசெய்து பாஜக, அதிமுக சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம் குறித்து ஆலோசனை நடத்தியிருப்பது மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.