திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநில இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்துக்கு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட இரண்டு காவலர்களும் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்து விரைந்து நீதி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சட்டம்-ஒழுங்கு சீரழிவின் உச்சம்
திருவண்ணாமலை ஏந்தல் புறவழிச்சாலைத் தோப்புப் பகுதியில் கிழக்கு காவல் நிலையக் காவலர்களான சுரேஷ் ராஜ் மற்றும் சுந்தர் ஆகியோரால் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட செய்தி பெரும் அதிர்ச்சி அளிக்கிறது என்று சீமான் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர், "திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது. அதிலும், குற்றத்தைத் தடுத்து மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே அப்பாவிப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது, சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சமாகும்" என்று சாடியுள்ளார்.
திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடு
தமிழ்நாட்டில் நடைபெறும் அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும், போதைப்பொருள் விற்பனையைக் கட்டுப்படுத்தாத மற்றும் மலிவு விலையில் மது விற்கும் திமுக அரசின் நிர்வாகச் சீர்கேடுதான் அடிப்படைக் காரணம் என்று சீமான் குற்றம்சாட்டியுள்ளார். 80 வயது மூதாட்டி முதல் பச்சிளம் குழந்தைகள் வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடூரங்கள் சர்வ சாதாரணமாக நடப்பதாகவும், இத்தனை சமூகப் பேரவலங்களும் நடைபெறும் ஆட்சியை நல்லாட்சி, பொற்கால ஆட்சி என்று சொல்வது கொடுமையின் உச்சம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், "சட்டம் ஒழுங்கைச் சீர்படுத்த வேண்டிய காவல்துறை ஆளும் கட்சியின் அதிகாரக் கண்ணசைவுக்குச் சேவை செய்யும் ஏவல்துறையாகச் செயல்பட்டு, எதிர்க்கட்சியினரை, ஊடகவியலாளர்களை அடக்கி ஒடுக்குவதையே முழு மூச்சாகச் செய்து வருகிறது. இதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழர் அறத்திற்கே இழுக்கு
தங்களது வாழ்வாதாரத்திற்காகத் தமிழ் மண்ணிற்கு வந்த அண்டை மாநில இளம்பெண்ணுக்கு இழைக்கப்பட்டுள்ள இப்பெரும் கொடுமையானது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளிடமிருந்து மக்களைக் காக்க வேண்டிய காவலர்களே இக்கொடும் குற்றத்தை நிகழ்த்தியிருப்பது வெட்கக்கேடானது என்று கூறிய அவர், "குற்றத்தில் ஈடுபட்ட காவலர்களை வெறும் பணியிடை நீக்கம் செய்வது மட்டுமே உரிய தண்டனை ஆகிவிடாது" என்று வலியுறுத்தியுள்ளார். குற்றவாளிகளை நிரந்தரம் பணி நீக்கம் செய்து, எவ்வித அரசியல் அழுத்தங்களுக்கும் ஆட்படாமல், நேர்மையான நீதி விசாரணையை விரைவுபடுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஆகவே, திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை செய்த காவலர்களுக்கு விரைந்து நீதி விசாரணை முடித்துச் சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்று அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.