பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5 ஆம் தேதி சென்னையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ஆம்ஸ்ட்ராங் கொலை நடந்து இன்றுடன் ஒரு வருடம் ஆன நிலையில், நினைவுப் பேரணி இன்று நடைபெற்றது. இதில், 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பொத்தூரில் அமைக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங்கின் 9 அடி முழு உருவச் சிலை திறக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் என்ற பெயருடன் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி இன்று தொடங்கினார். அத்துடன் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்து வைத்தார். நீல நிறத்தில் அமைந்துள்ள இந்த கொடியில் யானை தனது தும்பிக்கையில் பேனா வைத்திருப்பது போன்ற சின்னம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், “ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கு வாழ்த்துகள். புதிய கட்சிக்கு வாழ்த்துக்ககள். மிக தைரியமாக களம் காண வேண்டும். கடைசி வரை போராடுவார் பொற்கொடி. அரசியல் களத்திற்கு வந்த பிறகு எதைபற்றியும் யோசிக்க கூடாது. சட்டப்பாதை வழியாக பயணிக்க வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நிறைய் கேள்விகளுக்கு பதில்லை. கைதானவர்கள் உண்மையானவர்களா? அது தொடர்பான உண்மையை ஆராய வேண்டும். தமிழக அரசு நியமித்துள்ள வழக்கறிஞர் குழுவில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வழக்கறிஞர்களை சேர்க்க வேண்டும் கோரிக்கை வைக்கிறேன்.
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணம் முன்விரோதம் இல்லை. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் சூழ்ச்சியை கண்டறிய வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய் வேண்டும். காவல்துறை விசாரணையை இதோடு நிறுத்தி விடக்கூடாது.
ஆம்ஸ்ட்ராங் இறந்த பிறகு அமைதி நிலவுகிறது. பலர் பலவிதமாக பேசுகிறார்கள். ஆம்ஸ்ட்ராங் எனக்கு திரைப்பட துறையில் நல்ல ஆதரவு கொடுத்தவர். ஆம்ஸ்ட்ராங் அண்ணாவை ரொம்ப மிஸ் பண்றேன். என்னை பற்றி ஆம்ஸ்ட்ராங்கிடம் பலர் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் அவர் அது குறித்து என்னிடம் எதுவும் கேட்டதில்லை.
தலித் ஒற்றுமை அவசியம். இன்னமும் வன்கொடுமைகள் தொடர்கிறது. மிரட்டலுக்கு பணிய மாட்டோம். எங்களுக்கு நீண்ட அரசியல் பாதை இருக்கிது. மதவாத சூழ்ச்சியும் எங்களுக்குள் நுழைய முடியாது. தலீத் அனைவரும் ஒன்று திரள்வோம்” எனத் தெரிவித்தார்.