தேர்தல் நெருங்கிவிட்டால் போதும் அதிருப்தியாளர்களுக்கு பதவி கொடுத்து அரவணைக்கும் இருபெரும் கழகங்களைப் போல தமிழக பா.ஜ.க.வும், புதிய நிர்வாகிகள் பட்டியலை டெல்லிக்கு அனுப்பியிருக்கிறது. ஆனால் சீனியர்களோ, தங்களின் ஆதரவாளர்களும் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்று அழுத்தம் கொடுத்திருப்பதுதான் கமலாலயத்தில் கடமுடா சத்தம்.
இதுபற்றி பா.ஜ.க சீனியர் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். "தமிழக பாஜகவில் மாவட்டத் தலைவர்கள், மாநிலத் தலைவர் தேர்தல் முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள், துணைத் தலைவர்கள், பொருளாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் மாநில அளவிலான பதவிகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் தமிழக பாஜக மும்முரமாக ஈடுபட்டு வந்தது.
அதிருப்தியில் சில பிரபலங்கள்:
மாநிலத் தலைவரான நயினார் மாகேந்திரன், கட்சியின் கட்டமைப்பை நிர்வாக ரீதியாக மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளார். காங்கிரஸில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை உதறிவிட்டு, பா.ஜ.க.வில் ஐக்கியம் ஆனார் விஜயதரணி. அதேபோல சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவில் இணைத்தார் சரத்குமார். மேலும் பல கட்சிகளில் இருந்து விலகிய சீனியர் நிர்வாகிகள் பாஜகவில் சேர்ந்தனர். அவர்களுக்கு எல்லாம் உரிய அங்கீகாரம் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர்.
தற்போது மாநில நிர்வாகிகளின் எண்ணிக்கையை பொறுத்தவரை 8 மாநில துணைத் தலைவர்கள், 8 மாநில செயலானர்கள், 4 மாநில பொதுச் செயலாளர்கள், ஒரு பொருளாளர் என 21 பதவிகள் இருக்கின்றன. தமிழக காங்கிரஸில் இருப்பது போல கட்டு கட்டமைப்பை நயினார் மாற்றி அமைந்திருக்கிறார்.
அந்த வகையில் மாநில துணைத் தலைவர் பதவி 12, மாநில செயலாளர் பதவி 10, மாநில பொதுச்செயலாளர் 6 என உயர்த்தி பட்டியலை நயினார் நாகேந்திரன் தயார் செய்தார். நயினார் தலைவராக நியமிக்கப்பட்டபோதே 16 மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மேலும் 16 மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டி இருந்தது. ஆனால் அனைத்து நிர்வாசிகளையும் புதிதாக நியமிக்க முடிவு செய்த நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரிடம் ஆதரவாளர்களின் பட்டியலை கேட்டு வாங்கினார். அப்போது கேசவ விநாயகம், அண்ணாமலை ஆகியோர் ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளை நீக்க வேண்டாம் என வலியுறுத்தினர்.
அதற்கு நயினார், 'உள்கட்சி தேர்தல் சில மாவட்டங்களில் முறையாக நடக்கவில்லை. அதனால் பல மாவட்டங்களில் அதிருப்தி உள்ளது. சமுதாய அளவில் தொகுதியில் வலுவாக இருப்பவர்களை நிர்வாகியாக நியமிப்பது கட்டாயம். அப்போதுதான் உற்சாகத்தில் வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க கடுமையாக உழைப்பார்கள்' என்று கூறியுள்ளார்.
சீனியர்கள் பழைய நிர்வாகிகள் பட்டியலை கொடுத்ததால், அவர்களைத் தவிர்த்து புதியவர்களின் பட்டியலை கேட்டு வாங்கினார். அந்த பட்டியலை வைத்து ஒரு பதவிக்கு மூன்று பேர் வீதம் தேர்வு செய்து 60-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை தயார் செய்து, டெல்லியில் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை சந்தித்து வழங்கினார்.
அந்த பட்டியலில் அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரின் ஆதரவாளர்கள் சிலர் மட்டுமே இருப்பதாக தெரிகிறது. இதனால் புதிய நிர்வாகிகள் பட்டியலை வெளியிட விடாமல் செய்து வருகின்றனர்.
சிக்கலில் வினோஜ் பி.செல்வம்:
அதுமட்டுமின்றி, 'மாநில பொதுச் செயலாளர் பதவி வேண்டும்' என்று வினோஜ் பி.செல்வம், நயினாருக்கு அழுத்தம் கொடுத்திருந்தார். அதன்படி நயினாரும் பரிந்துரைத்து இருந்தார். இதனிடையே மிளகாய்ப் பொடி வெங்கடேசன், அமித் ஷாவை சந்தித்தது பெரும் சர்ச்சை ஆனது. இதற்கு பாலம் அமைத்துக் கொடுத்தது வினோஜ் செல்வம் என்கிறார்கள்.
போதாக்குறைக்கு போதைப் பொருள் விவகாரத்தில் சிக்கி இருக்கும் பிரசாத்துக்கும் வினோஜ் செல்வத்துக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை புகைப்படம் உறுதிப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வினோஜுக்கு புதிய பதவி வழங்குவதை டெல்லி நிறுத்தி வைத்துள்ளது. ஜூன் 30ம் தேதி புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், மேலும் 1 வார காலம் தள்ளிப் போகும் என்றார்.
செல்வம் அளித்துள்ள விளக்கத்தில், பிரசாத்தும் தானும் கல்லூரியில் ஒன்றாக படித்ததாகவும் அதற்குப் பிறகு 7 ஆண்டுகள் அவருடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள புகைப்படம் கல்லூரியில் படிக்கும் போது எடுத்த பழைய படம் என்றும் கூறியிருக்கிறார்.
எப்போது வெளியாகும் புதிய நிர்வாகிகள் பட்டியல்?
நிர்வாகி பட்டியல் தாமதம் குறித்து தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் சக்ரவர்த்தியிடம் பேசினோம். “புதிய நிர்வாகிகள் பட்டியலை தயார் செய்து டெல்லிக்கு அனுப்பி இருக்கிறார் தலைவர் நயினார் நாகேந்திரன். அதில் ஒரு பதவிக்கு 10 பேர் என்றால், 15 பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில் இருந்து 10 பேரை டெல்லி தலைமை தேர்வு செய்யும்.
இந்த நடைமுறைக்கு சில நாட்கள் எடுக்கும். மற்றபடி சீனியர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு பதவி கொடுக்கவில்லை என்பது தவறான கருத்து. ஜூலை 5ம் தேதிக்குள் நிர்வாகிகள் நியமனம் செய்தாக வேண்டும். அதற்குள் புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்படும்” என உறுதியாக தெரிவித்தார்.
(கட்டுரை: அரியன் பாபு/குமுதம் இதழ் /08.07.2025)