முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளையொட்டி அவரது உருவச் சிலைக்கு, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இன்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசுகையில், காங்கிரஸ் பின்னடைவு அடைந்தாலும் அது தோல்வி அல்ல என்றும், நீக்கப்பட்ட வாக்குகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 137-வது பிறந்தநாளை முன்னிட்டு, கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் பகுதியில் அமைந்திருக்கும் அவரது திருவுருவச் சிலைக்குக் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பீகார் தேர்தல் குறித்த நிலைப்பாடு
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் பீகார் தேர்தலில் காங்கிரஸ் பின்னடைவாக இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, "காங்கிரசுக்கு எப்பொழுதும் பின்னடைவு கிடையாது. அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி கிடையாது. இது மக்களுக்கான இயக்கம். முகம் இல்லாதவர்களுக்கும், பேச்சுரிமை இல்லாதவர்களுக்குமான இயக்கம். வெற்றி தோல்வியைப் பற்றி நாங்கள் கவலைப்படுவதில்லை. இது மக்கள் இயக்கம். இயங்கிக் கொண்டே இருக்கும். இதைத் தோல்வி என்று சொல்ல முடியாது; வெற்றி வாய்ப்பை இழந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். முதலில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. பின்னர் ராஷ்டீரிய ஜனதா தளம் (RJD) முன்னிலையில் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்," என்று செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
வாக்காளர்கள் நீக்கம்: ஆய்வு தேவை
மேலும் அவர், "பல லட்சம் வாக்குகள் பீகாரில் இருந்து அகற்றப்பட்டுள்ளது. அதையெல்லாம் ஆய்வு செய்ய வேண்டும். ஜனநாயகம் வீழ்வதற்கு யாரும் அனுமதிக்கக் கூடாது. யாராவது ஜனநாயகத்தை வீழ்த்த நினைத்தால் மக்கள் வெகுண்டு எழ வேண்டும் என்பதுதான் எங்களின் நேரு பிறந்தநாள் பிரகடனம்," என்று வலியுறுத்தினார்.
பா.ஜ.க. மீதான விமர்சனம்
தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசும்போது பா.ஜ.க.வை மறைமுகமாக விமர்சித்த அவர், "நாங்கள் வெற்றி பெற்றால் துள்ளி குதிப்பதும், வெற்றி வாய்ப்பை இழந்தால் கவுந்தடித்துப் படுப்பதும் இல்லை" என்றும் குறிப்பிட்டார். மேலும், நாடாளுமன்றத் தேர்தல் குறித்துப் பேசுகையில், "நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்ன பா.ஜ.க.வை பெரும்பான்மை இல்லாமல் ஆக்கி இருக்கிறோம். அவர்களின் செல்வாக்கைக் குறைத்து இருக்கிறோம்," என்றும் அவர் கூறினார்.

LIVE 24 X 7